தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.
Tag: #educationdepartment
விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]
தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசுப் […]
கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின் வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]
இவ்வாண்டு அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்று மட்டும் இரண்டாம்வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதமான ஜன கண மன என கீதையில் உள்ள பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன. திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்தற்கு பதில் […]
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் […]
ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]
ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லுரிகளுக்கும் யோகா பயிற்சியை கட்டாயமாக வேண்டும் என்று யுஜிசி பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]
அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]
புகையிலை போடுவது குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார் . புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டன புகைப்பழக்கம் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார். இதை தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி துறை […]
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் . இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம் நிறைவு பெற்றது . இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில் இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி 1 முதல் 9 […]