சோலார் பவர் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை பெறுவதாகும். பகல் நேரங்களில் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் மின் ஆற்றலை மின்கலங்களில் சேமித்து அதனை இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். இதுவரை நாம் சோலார் கார், சோலார் வீடு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது சீனாவில் சோலார் ரோடு போட்டுள்ளார்கள். சீனாவில் இருக்கும் சென்டம் புரோவின்சில் இருந்து இந்த ரோடு ஆரம்பமாகிறது. இந்த ரோடு சுமார் 1 கி.மீ தூரத்தில் 5875 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. […]
Tag: electricity
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்ட மின்சார அளவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டிய மின் கணக்கீட்டானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகரித்ததோடு, இதில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை […]
மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மின்துறை தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் அறிக்கையில் கூறும்பொழுது, கடந்த ஆண்டு மே மாதம் மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மின் துறையை தனியார்மயமாகவோ, கார்ப்பரேஷனாகவோ மாற்றக்கூடாது என போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன்பின் தொழிற்சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சட்டசபை கூட்டத்தில் மின் […]
கள்ளக்குறிச்சில் கார்த்திகை தீப விளக்கை ஏற்ற கோவில் கட்டிடத்தின் மேல் எறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் . சித்தேரி தெருவைச் சேர்ந்த 18 வயது குருமூர்த்தி என்ற இளைஞர் அங்குள்ள ராஜா ராஜேஸ்வரி கோவிலில் அர்ச்ஜகராகவும் ,போலீஸ் நண்பராகள் குழுவிலும் பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் புதன்கிழமை மாலை கோவில் கட்டடத்தின் மேலே ஏறி விளக்கேற்ற முயன்ற போது அவ்வழியாக சென்ற மின் கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த […]
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல் ஜான்சிராணி அவர் காயப்போட்ட துணியை எடுத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி […]
புதுச்சேரியின் சட்டப்பேரவை கட்டிடத்தில் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு , புதுச்சேரியில் 22 அரசு கட்டிடங்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் நாளொன்றுக்கு 100 யூனிட் […]
சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]
உத்தரப் பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை வீட்டில் மின்சார கட்டணமாக 128 கோடி ரூபாய் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள சம்ரி பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியர் இருவர், தங்களது வாழ்க்கையை கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவு வசதிகள் இல்லாத இவர்கள் அனைத்திலும் சிக்கனமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் விதமாக, இம்மாதம் […]
17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]