Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த யானைகள்….. சேதமான மரங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம் பாறையிலிருந்து கடையம் வரை இருக்கும் மலை அடிவாரப் பகுதியில் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் 20 நாட்களுக்கும் மேலாக இங்குள்ள தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. மேலும் இந்த யானைகள் தோட்டத்தில் உள்ள தென்னை, வாழை போன்ற மரங்களை பிடுங்கி அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனை பொருத்த போறோம்… வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானை விவசாய பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க என்ன பண்ணுறது… எல்லை மீறும் அட்டகாசம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய குட்டி கிராமத்தில் ஏராளமான வாழை மரங்கள் மற்றும் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்த கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்தியது. அதன்பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… எல்லை மீறும் அட்டகாசம்… வனத்துறையினரின் உத்தரவாதம்…!!

பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மேல் கூடலூர், எடப்பள்ளி, சில்வர் கிளவுட், தோட்ட மூலா போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பகுதிகளில் முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அள்ளூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் நிலவும் கடும் வரட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக சிறுமுகையில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலை மூடி கிடப்பதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து புதர் மண்டி காடு போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சோலார் மின்வேலி இருக்கு… ஆனாலும் அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கல்லாறு பழப்பண்ணையில் காட்டு யானைகள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்து விட்டன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் இருக்கும் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள மலையடிவாரத்தில் 8.92 எக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் பல்வேறு வகையான அலங்கார செடிகள், வாசனை திரவியங்கள் மற்றும் பழ மரங்கள் உள்ளன. இந்நிலையில் மலையடிவாரத்திலுள்ள இந்த பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள வாழை செடிகளை காட்டுயானைகள் நாசம் செய்கின்றன. இந்த  பகுதிக்குள் […]

Categories

Tech |