பாகன் தாக்கியதால் வளர்ப்பு யானையின் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வில்சன், ஜம்பு, சேரன் உள்பட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகன் முருகன் என்பவர் தாக்கியதால் 35 வயதான சேரன் என்ற வளர்ப்பு யானையின் இடது கண்ணில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த யானைக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை […]
Tag: elephant attack
காட்டு யானை ஜீப்பை வழிமறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மூனுகுட்டை, கோபனாரி போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோபனாரியில் இருந்து அங்கு வசிக்கும் மக்கள் ஜீப்பில் மூணுகுட்டை நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென ஒரு காட்டு யானை இந்த ஜீப்பை வழிமறித்துள்ளது. இதனால் அச்சத்தில் ஜீப்பை டிரைவர் பின்னோக்கி இயக்க காட்டு யானையும் துரத்தி ஓடி வந்துள்ளது. அதன் பிறகு […]
ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பொருட்டு இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, நாடுகாணி, தேவாலா, கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இந்நிலையில் முதுமலையிலிருந்து உதயன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் […]
காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தோட்ட தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகுனில்வயல் பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பாக்கு வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின் காட்டுயானை அப்பகுதியில் உள்ள மணியம்மா என்ற பெண் தோட்டத் தொழிலாளியின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டtதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்து லைன்ஸ், கார்வயல் மற்றும் கொள்ளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பாலவாடி லைன் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தனது குட்டிகளுடன் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]
ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து […]
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த யானை ஸ்கூட்டரை தாக்கிய வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி ஊராட்சி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஓன்று நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பயத்தில் அங்கேயே நின்று விட்டனர். இதனையடுத்து அந்த காட்டுயானை மெதுவாக சாலையை கடக்க […]
பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்த அடியால் வலி […]
யானை மிதித்ததால் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவர் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்டு பச்சாவயல்பதி என்ற இடத்திலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான ஆத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஒரு பாலத்தை […]
கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, இருவரும் நாமக்கலில் இருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா உள்ளனர். அதன்பின் அனைத்து இடங்களையும் […]
யானை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அட்டனை கிராமத்தில் பெரியசாமி மற்றும் சடையப்பன் என்ற இரு விவசாயிகள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை ஒட்டி சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும், பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அந்த தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதில் பரண் அமைத்து இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் […]