தாய் யானையின் இரண்டு நாள் பாச போராட்டத்துக்கு பிறகு இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள செம்ம்பாலா பகுதியில் கடந்த 23-ஆம் தேதி காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. அப்போது திடீரென சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தாய் யானை உள்பட சில காட்டு யானைகள் இறந்த குட்டி யானையின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தது. […]
Tag: elephant died
பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றிலிருந்த குட்டியும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ஓசூர் வனக்கோட்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 24 வயதுடைய பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் கால்நடை டாக்டர் […]
வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனபகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் உருகுழிபள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை டாக்டர் குழுவினர் அங்கு விரைந்து சென்று இறந்து […]
வனப்பகுதியில் 1 1/2 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், புலி, யானை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆனைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக வனத்துறையினர் […]
வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இரண்டு வயதான பெண் குட்டியானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 2 […]
வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரட்டு பாறை மற்றும் வால்பாறை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை காபி எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற வால்பாறை அரசு கால்நடை டாக்டர் […]
15 வயது ஆண் காட்டு யானை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள தேரன் கிணறு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மிகவும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட […]
ரத்த சோகை மற்றும் பட்டினியின் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெட்டிகொட்டை காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை […]
கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சானமாவு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக வருவது வழக்கம். மேலும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்து விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த […]