தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]
Tag: Erode District
குடிபோதையில் நடத்துனரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்ய வலியுறுத்தி அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகளை சாலையில் நிறுத்தி தங்களது எதிர்பை தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து காவிலிபாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பேருந்து ஒன்று புறப்பட்டது. அதிலிருந்த நடத்துனர் ரமேஷ் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியபோது குடிபோதையில் இருந்த பயணி கனகராஜ் என்பவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டார். பயணி கனகராஜ் டிக்கெட் வாங்காமல் தொடர்ந்து பயணித்தையடுத்து அரியப்பம்பாளையம் – பெரியூர் சந்திப்பில் […]
விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் பெயிண்ட்டராக வேலை செய்துவந்தார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்னூர் காவல் […]
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு […]
அய்யம்பாளையத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் இருந்த எரிவாயுவை பற்ற வைத்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மகனை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு […]
மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம் பதைக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலியம்மா ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மலை ஆற்றை கடந்துதான் களம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் […]
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]