யாருக்கும் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 72 ஆக உள்ளது. […]
Tag: # Erode District News
சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நவீன்(20). இவர் கடந்த 9ஆம் தேதி அந்தியூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுள்ளார். சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரிக்கு அவர் சென்றுகொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் […]
வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஈரோடு அடுத்துள்ள திரிவேணி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் சித்தோடு பகுதியில் சொந்தமாக பிவிசி குழாய் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெய்வசிகாமணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தை வழக்கமாக […]