காட்டுப்பன்றி தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பன் தொட்டி கிராமத்தில் ரவி(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி ரவியை தாக்கியது. அப்போது ரவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை விரட்டியடித்து ரவியை மீட்டனர். பின்னர் ரவி தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]
Tag: #Erode
50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், அன்னை சத்யா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனை […]
சரக்கு வாகனம் கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பலியான நிலையில், 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகொத்துக்காடு பகுதியில் வசிக்கும் 16 கட்டிட தொழிலாளர்கள் ராஜன் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலாளர்கள் அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை சல்மான் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாண்டம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை […]
காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைபாலம் உடைந்து கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதால் பேரிடர் மீட்பு குழுவினர் ஆயத்தமாக உள்ளனர். இந்நிலையில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தரைப்பாலம் உடைவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]
விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் கிராமத்தில் கூழி தொழிலாளியான கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோபி சார்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4,71,982 ரூபாய் கருப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட […]
காவல் நிலையம் அருகே காட்டு யானை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனை பார்த்ததும் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சஞ்சய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த ஈரோடு சைல்ட் லைன் ஆலோசகர் தீபக்குமார் காவல் […]
கணவன்-மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தாங்கள் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் சுந்தரம் கூறியதாவது, […]
மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கூலி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 8-ஆம் […]
விசா இல்லாமல் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் விசா இல்லாமல் தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார்(39), முகமது அலாவுதீன் காஜி(27) ஆகியோர் விசா இல்லாமல் […]
ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பட்டிமணியக்காரன் பாளையம் மற்றும் வேமாண்டம்பாளையம் ஆகிய பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 2 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் இருக்கும் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் […]
சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம், திண்டல், பழையபாளையம், பேருந்து நிலையம், கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். முன்னதாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் வெப்பம் வாட்டி வதைத்த […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருப்பகவுண்டன் புதூரில் சக்திவேல்- விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 18-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு […]
மோட்டார் சைக்கிள் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்மாசி தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தென்னிலை அருகே இருக்கும் பேக்கரியில் டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ரங்கம்மாள் கரூர்- கோவை சாலையை கடந்து சென்ற […]
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் அணையில் இருந்து அருவி போல ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கொடிவேரி அணையில் தண்ணீர் […]
அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]
கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன்(25), குமார் ராஜா(21) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் தனது மகன்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் வடவள்ளி […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி தர்மபுரி எம்.ஜி.ஆர் நகரில் விவசாயியான சக்திவேல்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வேலியின் சகோதரி இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த சகோதரிக்கு திதி கொடுப்பதற்காக சக்திவேல் தனது மகன் பாலமுருகன் உறவினரான துர்கா தேவி ஆகியோருடன் செரையாம்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு திதி கொடுத்த பிறகு சக்திவேல் […]
ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வளையக்கார வீதியை சேர்ந்த செல்வராஜன்(76) என்பவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனை அடுத்து செல்வராஜன் தான் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். […]
மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்து வருகிறது. இது தொடர்பான ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உயிருக்கும் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறதால் நுண்ணுயிர்களின் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காளிகுளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக விவேக் தெரிவித்துள்ளார். இதனால் தார்ப்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு […]
ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவுத்தூர் அருகே இருக்கும் ஏரிக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிலர் புலியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து […]
சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் […]
சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே இருக்கும் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் சிறுத்தை நடந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. […]
டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்ததால் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஒரு மயில் பறந்து வந்து அமர்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலின் உடலை மீட்டு ஈரோடு கால்நடை […]
குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பை ஒருவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் உப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரி மண்ணுளி பாம்பை பிடித்தார். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு ஈரோடு ரோஜா நகரில் […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் கூலித்தொழிலாளியான சக்திவேல்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சக்திவேல் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சக்திவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏம்மா பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகேஸ்வரி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் […]
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசில்வாடியில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மல்லன்குழி நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார் . இந்த விபத்து குறித்து […]
யானை அரசு பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரப்பள்ளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது தாளவாடி நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது […]
சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் தொட்டபுரம், காந்திநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. நேற்று காலை நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் துரைசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாலாஜி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் இருக்கும் சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன் சண்முகத்தின் […]
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்மண்திட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பேருந்து மணல்திட்டு மீது மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று […]
யானைகள் சரக்கு வேனை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் சரக்கு வேனை வழிமறித்து கரும்புகள் இருக்கிறதா என பார்த்துள்ளது. அப்போது கரும்புகள் இல்லாததால் ஆவேசத்துடன் யானைகள் வேனை அடித்து நொறுக்கியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக வானத்தில் […]
சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை ஹரிஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான மஞ்சுநாத் என்பவர் உடன் இருந்துள்ளார். அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை […]
சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திம்பம் மலைப் பாதையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இது […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]
விவசாயி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கேர்மாளம் கிராமத்தில் விவசாயியான தனராஜ்(40)என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகள் துளசிமணி(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15-ஆம் தேதி துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மேட்டூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கவியரசன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் என்பதால் 2 ரூபாயை கண்டக்டர் அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, 1 […]
சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வேனில் கோயம்புத்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பவானி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. […]
பல்லி விழுந்த பரோட்டாவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா, உறவினர்களான சண்முகம், சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் வாடகைக்கு கார் எடுத்து அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அனைவரும் காந்திஜி ரோட்டில் இருக்கும் தனியார் […]
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வழியாக சொல்லும் வாகன ஓட்டிகள் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சத்தமிடுவதால் கோபத்தில் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் மலை உச்சியில் நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பதுடன், நீரோடைகளில் இருக்கும் பாறை மீது […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தார் கல்பாவி பகுதியில் தங்கராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான அண்ணாதுரை(22) என்ற மகன் உள்ளார். இன்னிலையில் அண்ணாதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அண்ணாதுரை அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பவதாரணி(25) என்பவர் தனது கணவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் […]
சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தர்மராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கும்டாபுரம் அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் […]
கிணற்றுக்குள் ரிக் லாரி விழுந்து மூழ்கிய விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் மணிவேல் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு தோன்றுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் மண் பாதையில் லாரி பின்னோக்கி நகர்ந்தது. அப்போது ரத்தினசாமி […]
வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நாயக்கன்காட்டில் பெரிய தம்பி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு பேரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த தம்பதியினர் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]