யானையின் முன்பு கீழே படுத்து ஒருவர் கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. அப்போது கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இறங்கியுள்ளார். அதன்பின் அந்த நபர் யானை […]
Tag: #Erode
நகை மற்றும் பணத்தை தன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஞானிபாளையம் பகுதியில் இந்துமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் பெயர் ஹரிபாபு. இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். எனது கணவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் […]
மனைவி இறந்த துக்கத்தில் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு ஒப்பந்த பணியாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சக்தி ரோட்டில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 7-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் பரிமளா […]
கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவக்காளிபாளையம் மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 14-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அந்த மர்மநபர் 2 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஒத்தக்குதிரை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் இருக்கும் சாக்கடையில் தொப்புள் கொடியுடன் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 22 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டுள்ளது . இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் […]
கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சேத்துநாம்பாளையம் பகுதியில் பழமையான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோவிலில் பெரியசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் காலை 8 மணி அளவில் பெரியசாமி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது சாமி சிலைக்கு கீழே இருக்கும் படிக்கட்டில் நாகப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த ஏராளமான […]
லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறப்பதாக கூறி கடந்த 10-ஆம் தேதி முதல் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராசபாளையம் வெட்டுக்காட்டூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலை புதூரில் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டுக்காடு அருகே சென்று கொண்டிருந்த […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியம் தேர்தல் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சின்னியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்குய்யனூர் பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது நண்பரான செந்தில் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை செந்தில் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த […]
அமெரிக்காவிலிருந்து வந்த மாணவி தனது வாக்கினை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையத்தில் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் மோனிகா என்பவர் ஈரோட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அடுத்து மாணவி தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மாணவியின் பெயர் இல்லை. இது குறித்து மாணவி […]
குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன வடமலை பாளையத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீரங்காயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அய்யம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் செய்வதற்காக வீட்டிலிருந்த கேஸ் அடுப்பை சீரங்காயி பற்ற வைத்துள்ளார். அதன்பின் அருகில் இருக்கும் தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அடுப்பிலிருந்து பற்றிய […]
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுகரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான முனிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபேட்டை பேரூராட்சியின் 15-வது வார்டு அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் நேற்று முன்தினம் முனிய கவுண்டர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் வேலை […]
மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். அந்த உத்தரவின்படி பண்ணாரி சோதனை சாவடியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வாகனங்களும் […]
திருமணமான நபர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பஜனை கோவில் வீதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது ரியாஸ் கோபிக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ரிதம் என்ற மகள் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக ரியாஸ் […]
குடும்பத்தகராறு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் கையை வாலிபர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிருஷ்ணன் தனது மனைவியான கோமதியை அடித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதியின் அண்ணன் மெய்யப்பன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்காக போலீஸ்காரர்கள் மகேஷ்குமார், […]
மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மூணு வீடு என்ற குடியிருப்பு பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் பணம் மற்றும் நகை ஏதாவது உள்ளதா என தீவிரமாக தேடி பார்த்துள்ளார். அப்போது திடீரென கண்விழித்த மூதாட்டி திருடன் […]
அரியவகை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கு ஊளி, விளாங்கு மீன், பாறை போன்ற பல்வேறு வகை மீன்கள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருசுறா மீன் வகை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிய வகை மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். இந்த மீன் கிலோ 600 […]
வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் சிக்கள்ளி அருகே சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் யானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து யானைகள் சாலையை கடந்து சென்ற பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு […]
சாக்கடை கால்வாயில் ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டூர் சாலையில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை தூய்மைப் பணியாளர்களான சுந்தர்ராஜ், செந்தில் ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீரில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை பார்த்து தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை சேகரித்து அதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]
மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இனியா என்ற மகள் உள்ளார். ரஞ்சித்துக்கு சமையல்காரரான பிரகதீஷ் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்ற பிரகதீஷ் இனியாவை கையில் தூக்கி வைத்து கொண்டு வேடிக்கை காட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரகதீஷின் கை வீட்டிற்கு அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது […]
விவசாயியின் மகளை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கீழ்வாணி பகுதியில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மூங்கில் பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் மாணவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி […]
சாமி சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு நாகப்பாம்பு வந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் கன்னிமார் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவிலில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அந்த நாகப்பாம்பு 7 கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக […]
பட்டப்பகலில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 நாய்களை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி திரிகிறது. நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் சிறுத்தை இதுவரை சுமார் 5 ஆடுகளை கடித்துக் கொன்றது. இதனால் 26-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதியம் 12 மணி அளவில் வேலுச்சாமி என்பவரது தோட்டத்திற்குள் […]
சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் கன்னிமார் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சிறிய அளவிலான மேடை அமைத்து, இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு சொந்தமான நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் […]
மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடை வைத்து செருப்பு தைத்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மருமகளுக்கு சேகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகரின் மகன் தனது தந்தையிடம் இது […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரையும், உதவியாக இருந்த அவரது தந்தையையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் வசிக்கும் பெண் தனது 16 வயதுடைய மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முருகேசன் என்பவர் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பாரதி தெருவில் தொழிலதிபரான தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளாஸ்டிக் கேன் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 5 வயதுடைய யாழினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தினேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சடையப்பபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னுச்சாமி என்பவர் ஓட்டி வந்த மொபட் தினேஷின் மோட்டார் […]
நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கம்பனூர் காலனி பகுதியில் விவசாயியான மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் காவலுக்காக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் மாரிச்சாமி தூக்கத்திலிருந்து விழித்து வீட்டிற்கு வெளியே டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது திடீரென நாய் காணாமல் போனது. மேலும் நாய் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்குய்யனூர் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் தனது நண்பரான பன்னீர்செல்வம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் திருமண விழாவிற்கு சென்று விட்டு கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த […]
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தோட்டில் இருக்கும் டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் என்ஜினீயரான கவிதா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு […]
அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை ஒருவர் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இந்த கோவிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது. அதன்பின் கடந்த 3-ஆம் தேதி தீர்த்த குடம், பால் குடம், ஆறுமுகக் காவடி, வேல் மற்றும் அக்னி கும்பம் எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். கடந்த 4-ஆம் தேதி […]
ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது விஜயகுமாரை பார்க்க […]
பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கற்கள் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சத்தி பண்ணாரி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இந்நிலையில் நஞ்சன்கூடு பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி குளிர்பானங்கள் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைதடுமாறி பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் […]
மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமலிங்கபுரம் அம்பேத்கர் நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கம் என்ற மகன் உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மாணிக்கம் சித்தப்பா முறை என கூறப்படுகிறது. […]
கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி கெட்டவாடி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் விவசாயியான இளங்கோ என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கரும்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மேலும் காட்டு யானை இளங்கோ வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடியை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சனமுல்லா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான இர்பான் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 19-வது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதன் பின் கண்ணிமைக்கும் […]
சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை […]
நகை கடையில் திருட முயன்ற இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கடைவீதியில் பத்ரி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு மேல் இருக்கும் வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டதால் சீனிவாசன் தூக்கத்திலிருந்து விழித்து நகை கடைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு நபர் கடையின் சுவரை இடித்து கொண்டிருப்பதைக் கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சீனிவாசன் அந்த நபரை […]
சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை […]
2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புதூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வினில் குமார் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் […]
மர்ம விலங்கின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மற்றும் 1 கோழி ஆகியவற்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் மற்றும் கோழி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புளியம்பட்டி பகுதியில் […]
மேம்பால சுற்று சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போச்சம்பள்ளி பகுதியில் தங்கியிருந்து தமிழ்நாடு 7-வது சிறப்பு காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானப்பிரகாசம் பெருந்துறையில் இருக்கும் நண்பர் ஒருவரை […]
குடும்ப பிரச்சனையில் இளம்பெண் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புதூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வினில் குமார் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ரமேஷ் குடும்ப […]
தொழிலாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தரணி குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான தனசேகர் கடந்த 1 ஆண்டாக வேலை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் சங்கர் புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹர்ஷினி என்ற மகளும், கௌரீஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஹர்ஷினி சேலம் மாவட்டத்திலுள்ள புனிதாவின் தங்கை சித்ரா வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹர்ஷினியை அழைத்து வருவதற்காக சங்கர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சித்ரா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே […]
தெரு நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் மற்றும் கோழி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான 4 ஆடுகளும், ஒரு கோழியும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் […]
மின்கம்பி மீது உரசியதால் சோளத்தட்டு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அருள்வாடி கிராமத்தில் இருந்து சோளத்தட்டு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான அருள்வாடி குட்டை அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது சோளத்தட்டு உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் டிரைவர் உடனடியாக டிராக்டரை விட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். […]
சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் மைக்கேல்பாளையம் நால்ரோட்டில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]