Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஒலி எழுப்பாமல் இருங்க” உலா வரும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் அருகே இருக்கும் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டனர். இதையடுத்து காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு 1/2 மணி நேரம் தாமதமாக வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இது குறித்து வனத்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற லாரி…. 4 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

லாரி பழுதடைந்து நின்றதால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி திடீரென பழுதாகி நடுவழியில் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 எலுமிச்சை பழம் 25 ஆயிரம் ரூபாய்…. ஏலம் எடுத்த விவசாயி…. அம்மனுக்கு சிறப்பு பூஜை…!!!

பூஜையில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தை விவசாயி 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனி கவுண்டம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் விழாவுக்காக கடந்த 18-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். அதன்பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐயோ…! மதுபோதையில் குதிச்சிட்டேன்…. சத்தம் போட்ட தொழிலாளி…. விரைந்து செயல்பட்ட வாலிபர்கள்…!!

மது போதையில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த தொழிலாளியை வாலிபர்கள் காப்பாற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தொழிலாளியான ஜெயராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி சக்தி நகரின் மையத்தில் ஓடும் பவானி ஆற்று பாலத்தில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயராம் தடுப்பு சுவர் மீது ஏறி நின்று ஆற்றுக்குள் குதித்துவிட்டார். இதனையடுத்து ஒரு மரக்கிளையை பிடித்தவாறு என்னை காப்பாற்றுங்கள் என ஜெயராம் சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம்…. விரட்டியடித்த பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் மாதவா என்பவரது வீட்டு மதில் சுவரை தாண்டி சென்று மாட்டு தீவனத்தை தின்றுள்ளது. அதன் பிறகு அப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு அமைத்திருந்த கழிவுநீர் தொட்டி, தடுப்பு சுவர் போன்றவற்றை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்களை ஏமாத்திட்டாங்க” முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

பண மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 10-ஆம் வகுப்பு வரை படித்த நான் கிடைக்கும் வேலையை செய்து வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு அத்தாணியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான மருதமுத்து என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அப்போதைய அமைச்சர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சியினரின் சின்னம் பதித்த வேஷ்டி-சேலை…. வியாபாரிகளின் எதிர்ப்பார்ப்பு…!!

ஜவுளிக்கடைகளில் அரசியல் கட்சியினரின் சின்னம் பதித்த வேஷ்டி மற்றும் சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி சந்தையில் கட்சி கரைகள் போட்ட வேஷ்டிகள் மற்றும் சின்னங்கள் பதித்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுவர். இதனால் தங்களது ஆதரவாளர்களுக்கு வேஷ்டிகள் மற்றும் சேலைகளை வேட்பாளர்கள் வாங்கி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஜவுளி உள்பட அனைத்து வியாபாரங்களும் பாதிக்கப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஜெ. ஜெ நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு மூட்டையில் மதுபாட்டில்களை வைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபுதூர் பகுதியில் வசிக்கும் வாசு என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது நண்பரான மூர்த்தி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஊசிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் பலமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஜெ. ஜெ நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு மூட்டையில் மதுபாட்டில்களை வைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபுதூர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதில் கலந்து கொள்ள வேண்டாம்” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குப்பாண்டபாளையம் அண்ணா நகரில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சங்ககிரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எட் ஆசிரியர் படிப்பு படித்து முடித்துள்ளார். அதன் பின் யாழினி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்ககிரியில் இருக்கும் கல்லூரியில் பிரிவு உபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற செயல்கள்…. வசமாக சிக்கிய நபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் 5 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 41 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அப்பா எனக்கு வாழ பிடிக்கல” தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என் பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் அமுது என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த தமிழ் அமுது ஏதோ ஒரு மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து ரவி கேட்ட போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரை சாப்பிட்டு விட்டேன் என […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான கார்த்தி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஊசிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த டிராக்டரும் பலமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விவசாயி…. இரவில் நடந்த பயங்கர சம்பவம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டு யானை விவசாயியை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி பிரிவு பீக்கிரி பாளையம் பகுதியில் விவசாயியான குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு குருநாதன் இரவு நேரத்தில் தனது தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குருநாதனின் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து யானையின் பிளிறல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குச்சியை பயன்படுத்திய மர்ம நபர்கள்…. ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஓய்வுபெற்ற சப்-கலெக்டரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூலப்பாளையம் என்.ஜி.ஜி. ஓ நகரில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டரான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் கதவை திறந்த மர்ம நபர்கள் குச்சியை பயன்படுத்தி மேஜையில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வெள்ளியங்கிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராம மக்களின் நம்பிக்கை…. உருவ பொம்மைகளை வைத்து வினோதமான வழிபாடு…!!

கோவிலில் உருவ பொம்மைகளை வைத்து பக்தர்கள் வினோதமாக வழிபாடு நடத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைதுறையம் பாளையம் கிராமத்தில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் மாதையன் என்கிற நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலை முன்னிட்டு யானை, மாடு, நாய், மனிதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுக்கு பக்தர்கள் வர்ணம் பூசி வனத்துறையினரின் அனுமதியுடன் வழிபாடு நடத்துவது வழக்கம். இப்படி வழிபாடு செய்தால் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் ஆரோக்கியமாக வாழும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த யானை…. உடல் நசுங்கி பலியான விவசாயி…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜே.ஆர்.எஸ் புரம் கிராமத்தில் விவசாயியான மசனையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தோட்டத்திலேயே குடிசை அமைத்து மசனையன் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறிய காட்டுயானை தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உட்கார்ந்த நிலையிலேயே இறந்த காவலாளி…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் வேரோடு சாய்ந்ததால் உட்கார்ந்த நிலையிலேயே காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டவராயன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து காவலாளியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஒரு மரத்திற்கு அடியில் உட்கார்ந்து சமையல் பாத்திரங்களை கழுவியுள்ளார். அப்போது பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒலி எழுப்பியவாறு வந்த ஓட்டுநர்…. காலால் மிதித்து உடைத்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

காட்டு யானை கார் மற்றும் அரசு பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் காரப்பள்ளம் சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே நின்று கொண்டு அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதனால் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சிறிது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த மயில்கள்…. வசமாக சிக்கிய விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மயில்களை கொன்ற குற்றத்திற்காக விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாளையத்தில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் 9 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த 9 மயில்களையும் கைப்பற்றி சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் அசோகன் மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுங்க” குட்டியுடன் வழிமறித்த காட்டு யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

குட்டியுடன் சாலையின் நடுவே நின்ற காட்டு யானை வாகனங்களை வழிமறித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் காரப்பள்ளம் சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே நின்று கொண்டு அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதனால் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அட்டை பாரத்துடன் நின்ற லாரி…. மளமளவென பற்றி எரிந்த தீ…. ஈரோட்டில் பரபரப்பு…!!

அட்டை பாரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி லாரியை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சரவணகுமார் தினமும் மாலையில் காரமடையில் இருந்து அட்டை கோன் பாரம் ஏற்றிக்கொண்டு மறுநாள் காலை அதனை ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் இறக்குவது வழக்கம். இந்நிலையில் சரவணக்குமார் இரவு நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் அன்றே…. துடிதுடித்து இறந்த சகோதரிகள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலவமலை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகளான ஷாலினி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் நிஷா அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு சகோதரிகள் லட்சுமி நகர் பகுதியில் இருக்கும் பஞ்சாபி ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டு…. பெண்ணின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

தற்கொலை செய்ய முடிவு எடுத்த மூதாட்டியை காப்பாற்றியதற்காக பெண் போலீஸ் ஏட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காவல் நிலையத்தில் ஆனந்தவள்ளி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தவள்ளி வேலை முடிந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி -குமாரபாளையத்தில் இணைக்கும் காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் கைப்பிடி சுவர் மீது பெண் ஒருவர் ஏற முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தவள்ளி உடனடியாக வாகனத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழுத்தில் காலை வைத்து மிதித்த தந்தை…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகனும், தர்சினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாத ஜெகநாதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெகநாதன் தனது மகன் சுதர்சனின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்…. ஓட ஓட விரட்டிய யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை காட்டுயானை ஓட ஓட விரட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்ணாரி அருகே இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காட்டு யானைக்கு அருகில் சென்று அதனை செல்போனில் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற தொழிலாளி….11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணம்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நட்பாக பேசி வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் ஆசை வார்த்தைகள் கூறி ராஜமாணிக்கம் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாய்க்காலுக்குள் பாய்ந்த ஸ்கூட்டர்…. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் வாய்க்காலுக்குள் பாய்ந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ஓட்டைகுளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் சதீஷ்குமாரும், சுமித்ராவும் துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது வாய்க்கால் கரையோரம் ஒரு பாம்பு குறுக்கே சென்றதைப் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை எழுப்ப சென்ற தாய்…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான கதிரவன், மணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது கதிரவனும், மணியும் இணைந்து அரிவாளின் பின்பக்கத்தால் அண்ணாமலையின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலையின் தாயார் ராசாத்தி என்பவர் சண்டையை விலக்கி விட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடு மேய்ப்பதற்காக சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள காகம் கிராமத்தில் விவசாயியான நல்லசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்திற்கு ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் கயிற்றில் வாளியை கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நல்லசிவம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதையடுத்து தோட்டத்திற்கு சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பூங்கொடி அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த காட்டுயானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஒற்றை காட்டு யானை கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் காரப்பள்ளம் அருகில் யானைகள் தங்களது குட்டியுடன் கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும். இந்நிலையில்  காரப்பள்ளம் சோதனை சாவடி அருகில் ஒரு காட்டு யானை வந்துள்ளது. இந்த காட்டு யானை அவ்வழியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிரையம் செய்து கொடுத்தேன்” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவைத் தொழிலாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சலவை தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அன்பரசு என்ற மகன் இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனையில் வீடு கட்டுவதற்காக ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை சக்திவேல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிக லாபம் தரும் திட்டம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நாட்டுகோழி பண்ணையின் மூலம் மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஹெல்த்தி பவுல்ட்ரி என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை அமைத்துள்ளனர். அதன் முதல் திட்டமாக ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதோடு, 500 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனங்களும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்னால் அடைக்க முடியவில்லை….. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடன் தொந்தரவால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு செந்தில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது உறவினர்கள் செந்திலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விட்டனர். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த இயலாததால் தன் வாழ்வதைவிட இறந்து விடுவதே மேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்கு சேர்ந்து 2 நாட்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

வேலைக்கு சேர்ந்து 2 நாட்களில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்டாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் குக்கிளி மாவட்டத்தை சேர்ந்த அமல்பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களே ஆன நிலையில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். அதன்பின் அவரது மனைவியிடம் கைப்பேசியில் கோபமாக பேசியுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமல்பாலின் உறவினர்கள் அவருக்கு போன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடைக்கு சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்திலுள்ள பிலியம்பாளையம் பகுதியில் விவசாயியான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நம்பியூரில் இருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் தனது இருசக்கர வாகனத்தில் வீடு செல்வதற்காக சாலையை கடக்கும் போது, பின்னால் வந்த பனியன் கம்பெனிக்கு ஆள் ஏற்றிச்செல்லும் வேன் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் கருப்புசாமியின் தலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயிலில் பயணித்த கல்லூரி பேராசிரியை…. சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக விமானப்படை அவில்தாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   பெங்களூரில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியை ஒருவர், தசரா விடுமுறைக்காக,  கேரள மாநிலத்திலுள்ள கோட்டத்திற்கு கோவை வழியாக செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அவில்தாரான பிரப்ஜோட் சிங் என்பவர் பேராசிரியைக்கு எதிரே உள்ள இருக்கையில் பயணம் செய்து வந்துள்ளார். அப்போது பிரப்ஜோட் சிங் பேராசிரியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். நள்ளிரவு நேரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்…. சுகாதார சீர்கேடு அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிரம்பிய குப்பைகளை எடுக்காமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால் குப்பைகள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. பூசாரிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்குள் வைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் பூசாரியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் கோவிலுக்கு சென்று சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து கொண்டிருந்த போது முக கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லப்பாளையம் செல்லும் வழியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அப்பகுதியில் குடிநீர் தேங்கி அசுத்தம் அடைவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 மாதங்களாக சிரமம்…. தாய்-மகள் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், பவன்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ரம்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமடையவில்லை. இந்நிலையில்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் ரம்யா தனது மகளுடன் குதித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்து இறந்த யானை…. வனத்துறையினரின் தகவல்…. ஈரோட்டில் சோகம்…!!

பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நத்தம் ஓங்கே பள்ளம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜவுளி வாங்க சென்ற தம்பதியினர்…. கணவரின் கண்முன்னே நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜவுளி வியாபாரி என சுந்தரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஜவுளி வாங்குவதற்காக ஸ்கூட்டரில் ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக சுந்தரேசனின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மோகனாவின் மீது லாரியின் சக்கரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குறுகிய மலைப்பாதை வளைவுகள்…. பழுதடைந்த லாரி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

நடுரோட்டில் லாரி பழுதானதால் 2 மணிநேர போக்குவரத்து பாதிப்படைந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளின் வழியாக தினமும் லாரி, பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பாதை தமிழகம்- கர்நாடகம் இடையே முக்கிய சாலையாக அமைந்துள்ளது. மலைப்பாதை வளைவுகள் மிகவும் குறுகியதாக இருப்பதால் அதன் வழியாக அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்படைகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயிலில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம்  ரயில் நிலையத்திற்கு, சண்டிகரில் இருந்து மதுரைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில்  s-5 பெட்டியில் பயணம் செய்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீச்சல் கற்று தருகிறேன்” மகன்களை அழைத்து சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நீச்சல் கற்றுக்கொடுக்க மகன்களை ஆற்றிற்கு அழைத்து சென்ற தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தூருசாம்பாளையம்  பகுதியில் எலக்ட்ரீசியனான சக்திவேல் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தோஷ், பூபேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் தனது மகன்கள் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பியதால் வைரமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றிற்கு அவர்களை   கூட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் மிதந்து வந்த வாழைமரத்தை பிடித்து அதன்மூலம் நீச்சல் கற்று தருவதாக கூறிய சக்திவேல் ஆற்றில் குதித்துள்ளார். தற்போது பவானிசாகர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் உலா வரும் யானை…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

யானை தனது குட்டிகளுடன் சாலையை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. அதற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் மான், செந்நாய், சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகிறது. இப்பகுதியில் திண்டுக்கல் – பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் எப்போதும் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்கும். மேலும் இந்த சாலையில் யானைகள் தனது குட்டிகளுடன் அதிகம் வலம் வருகின்றன. கடந்த சில […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

12-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கல்யாணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவி மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்சசியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெள்ளாளபாளையம் பகுதியில் வசிக்கும் பிரதீப் குமார் என்பவர் மாணவியிடம் ஆசை […]

Categories

Tech |