கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.. […]
Tag: #Erode
ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 […]
ஈரோடு அருகே பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. கணவனை இழந்த இவர் தனது மகன்களான விக்னேஸ்வரன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாயாருடன் சண்டை இடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 […]
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில் காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]
பெருந்துறை அருகே தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயது ருக்குமணி. இவரது மகன் முத்துச்சாமிக்கு வயது 40 ஆகிறது.. முத்துச்சாமிக்கு திருமணமாகவில்லை.. கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவின் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இவரது மகன் முத்துச்சாமி வேலைக்கு செல்லாததோடு மட்டுமில்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று அடிக்கடி குடித்து வந்துள்ளார். […]
பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பிரதான சாலையில் பெருந்துறை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், இருவரது உடல்களையும் […]
கர்நாடகாவிலிருந்து உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை வட்டாட்சியர் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோம்பு பள்ளம் என்ற இடத்திற்கு உரிய அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வருவதாக வட்டாட்சியர், மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேசன் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து […]
சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]
சத்தியமங்கலம் அருகில் கரடி தாக்கியதில் விவசாயி காயம் அடைந்த சம்பவம் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ள புதூர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசித்து வருகின்றன. இந்த கரடிகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து செய்யும் அட்டகாசத்தால் பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் என்று புதுக்குய்யனூரைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரை புதரின் மறைவிலிருந்து இரண்டு கரடிகள் தாக்க முயன்றன. அவர் கையில் வைத்திருந்த தடியைக் […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]
காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார் மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]
ஈரோட்டில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கிராமத்தில் சுபாஷ் என்ற நபர் கட்டிடம் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணி செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவிக்கும், இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில், காதலாக மாறியது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சிலர், மறைவான பகுதிகளுக்கு அந்த வாலிபர் பெண்ணை அழைத்து […]
ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் […]
வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆன்லைனில் www.tnepass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.ஈரோடு மாவட்டத்திற்கோ அல்லது பக்கத்து மாவட்டதிற்கோ செல்ல மட்டுமே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட முடியும். வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு மாநில அனுமதிச்சீட்டு குழுவினரால் அனுமதி வழங்கப்படும். இணையதள வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள தாலுகா நிலையத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி அனுமதி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]
ஈரோடு அருகே சரக்கு ஆட்டோ மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய சமயத்தில் தக்காளிகளை சில நிமிடத்திலையே அப்பகுதி மக்கள் எடுத்து சென்றுவிட்டனர். ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்று தக்காளி பெட்டிகளை பாரம் ஏற்றி வந்தது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது. இதில் வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பிக்க தக்காளிகள் அனைத்தும் வண்டியிலிருந்து […]
பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தி ஒன்றை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியே வரும் சமயங்களில் முககவசத்தை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், பழங்கள் உள்ளிட்டவையும், மருந்துப் பொருட்களையும் […]
ஈரோட்டில் கொரோனாவிற்காக நிவாரண நிவாரணத்தொகை வசூலிப்பதாக கூறி ரூ 1 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின் கால் அட்டென் செய்து பேசுகையில், எதிர் முனையில் பேசியவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண நிதிக்காக உங்களது மருத்துவமனையிலிருந்து தொகை […]
ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ஈரோட்டில் சுரைக்காய் நல்ல விளைச்சல் கொடுத்தும் பயனில்லாமல் போவதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் சொட்டுநீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுரைக்காய்நல்ல விளைச்சலை கொடுத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்ய வழியில்லாமல் அவை அழுகிப்போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது சுரைக்காயை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட […]
ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் […]
ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]
ஈரோட்டில் கொரோனா அச்சம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வந்த […]
144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
கொரோனா வைரஸ் நமது மாநிலங்களில் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களுக்கு மக்கள் அடுத்த 15 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்திலும் பரவாமல் தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து செய்தி குறிப்பு […]
ஈரோடு அருகே தனது மரணத்திற்கு கணவர் தான் காரணம் என்று தாய்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை அடுத்த நஞ்சனபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கும் ஆர்எஸ் குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் […]
ஈரோட்டில் மணமகனை தாக்கிவிட்டு மணமகளை கடத்தல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி. ஒரே நிறுவனத்தில் பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இருவரும் மாற்று சமுதாயம் என்பதால் இருவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு இருந்ததால் செல்வன் ஈஸ்வரன் என்பவரின் உதவியை நாடினார். பின்னர் அங்குள்ள கொளத்தூரின் குளக்கரை பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து நேற்று […]
திடீர் சோதனையை நடத்திவரும் வருமான வரித்துறையினரால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர் தற்போது மத்திய அரசின் வருமான துறையினர் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈரோட்டில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் கம்பெனிக்கு சொந்தமான விற்பனை நிலையம் மற்றும் உற்பத்தி கூடம் உட்பட நான்கு இடங்களில் திடீரென 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ள நிலையில் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சோதனை பலரது […]
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 18 வீடுகள் அகற்றப்பட்டன. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த ஆவுடையார் பாறை பகுதிக்கு முன்பாக உள்ள சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள நிலமானது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதை சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி குடியேறினர். பின் இதுகுறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட […]
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மனைவி உயிரிழக்க கணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கங்காபுரம் பகுதியை அடுத்த கொளத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் வினித், விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்றையதினம் ரமேஷ் மற்றும் வினித்க்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடைக்கு சென்று வாங்கி விட்டு பின் டீ போடுவதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கேஸ் கசிந்தது தெரியவில்லை. தீ பற்ற […]
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தில் காந்தி சிலை முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, ஒற்றைக் […]
சாயக்கழிவு நீரை கால்வாய்களில் வெளியேற்றிய பத்துக்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாநகரத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. கழிவு நீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறையின் சார்பில் இந்த ஆலைகளுக்கு தொடர்ந்து அறிவுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில ஆலைகள் அப்படி செய்வதில்லை. அவ்வாறு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்றாமல், சாய கழிவுகளை நீர் […]
ஈரோட்டில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய காவல்துறை அதிகாரியே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியையடுத்த சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக பிரமுகரும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த […]
ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார். பேருந்தில் இருந்த […]
தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும் மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த பயணிகள் […]
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் […]
அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்குண்டான அறிகுறிகளுடன் நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார். சீன நாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் […]
ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக […]
விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]
ஈரோடு அருகே கூலி தொழிலாளியை 12 பேர் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கே எஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்ற கூலித்தொழிலாளி பின்தலையில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் ஆங்காங்கே கத்திகளுடன் இறந்து கிடந்ததை அடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிகாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, காரை வேகமாக […]
கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை […]
ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர் ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் […]
ஈரோட்டில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை அடுத்த கே.எஸ் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர்மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட போது, தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கத்திக்குத்து வாங்கிய வாலிபர் ரத்த […]
திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]
கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை செய்வதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டுறவுச் நாணயச் சங்க மோசடி குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு […]
சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை அடுத்த புளியங்குடி பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டோர்க்கு தொடர்ந்து காய்ச்சல் பரவி வருகின்றது. சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால், காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வருவதில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் காய்ச்சலால் […]