கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் […]
Tag: #fakemoney
நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில் இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி, […]
உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ளநோட்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 3 மாணவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களது கையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கீர்த்திகான், ஈஸ்வரன், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் […]
நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]