கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: falls
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலக்குடி ஆற்றில் பாய்கிறது. மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று புகைப்படம் […]
ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு கடந்த 6-ஆம் தேதி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் […]
அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 நாட்கள் தடை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு […]
அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று சாரல் மழையுடன், குளுமையான காற்று வீசியது. இந்த சீசனை அனுபவிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்தனர். இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர். இதனையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீன் வெட்டிப்பாறை அருவியில் பல வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொட்ட தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் அழகை பெற்ற சுற்றுலா தளமான செண்பகத்தோப்பு பகுதியில் மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் . மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் குளித்தும், சறுக்கி விளையாடியும், […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி […]
ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]