ஒடிசாவுக்கு புயல் பாதிப்பு நிவாரண நிதியாக நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பானி புயலால் , பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார் .
Tag: fani cyclone
தமிழக அரசு, ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல நகரங்களை, கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]
ஒடிசாவில், பானி புயலால், நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]
இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது . ஒடிசா மாநிலம் புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல், புவனேஸ்வர் போன்ற மாவட்டங்களில் பெரிய சேதத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த […]
ஃபானி புயல் வலு குறைந்தது!!!
அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது . தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று பெயரிடப்பட்டது. இந்த ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. […]