டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி […]
Tag: Farmers
அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் திறப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி சப்-கலெக்டர் உட்பட அதிகாரிகள் தண்ணீரை திறப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கோரிக்கை விடுத்த படி 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்ட பேரவையிலிருந்து பாஜக அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.. அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. “3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு […]
காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர், குறைந்த செலவு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிகளவு நாசம் செய்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, உணவு தேவைக்காக காட்டு பன்றிகள் விளை […]
டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வினோத் குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டம் வாழ்க விவசாயிகள் சங்க தலைவர் காளிராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு […]
ஏர் கலப்பையுடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து ஏர் கலப்பையுடன் விவசாயிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். அந்த […]
ஜனவரி 26 ல் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறியுள்ளது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது “விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத […]
குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு […]
நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், புரூக்கோலி, பூண்டு போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து மலை காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது. இதுபற்றி வியாபாரிகள் கூறும் பொழுது பீன்ஸ், புரூக்கோலி, பூண்டு, பஜ்ஜி மிளகாய், கேரட் போன்ற பொருட்கள் ஒட்டன்சத்திரம், மைசூர், […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]
அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 41 நாளை கடந்துள்ளது எனினும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இந்த ஏழு முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது. எனவே விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை […]
எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி, சோபனபுரம் பகுதியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 40 டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி சென்ற போது அதன் எடை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்பட்டனர். எனவே அந்த மூட்டைகளை லாரியிலிருந்து […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]
பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, […]
தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு […]
திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அதில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த 50 பவுன் நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில், விவசாய தொழிலில் பொருத்தவரையில் கடின உழைப்பு போட்டால்தான் வருமானம் […]
விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதை பரிசோதனைக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை விதை சான்று இணை இயக்குனர் நேரில் சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த விதை வகைகள், 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அவற்றிற்கான மருத்துவ பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் விதைகளுக்கான ஈரப்பதம் வெப்பநிலை அதற்கான வெளிச்சத்தின் […]
திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதப் பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டையின் மூலம் கடன் பெறும் வசதியும், ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதி உதவியும் வழங்கப்படும். அந்த வகையில், இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் […]
ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது. ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ள நிலையில், கூடவே சலுகையாக விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மின்சாரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு சுமார் 8,553 கோடி ரூபாயை மானியமாக வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக மாநில அரசுக்கு நேரடியாக தெரிவிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், குறைகள் விரைவில் சரி […]
இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]
திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில் அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் […]
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக […]
விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]
நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர். நாமக்கல் பகுதியில் இரவில் சோளத்தட்டு பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் அதில் உள்ள இனிப்பு சுவை மாறாமல் இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் இதன் அறுவடை பணி இரவிலேயே நடைபெறுகிறது. கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சை சோளத்தட்டு என்பது கால்நடைகளுக்கு பிரதான தீவனமாக உள்ளது. நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டுமே துணையாகக் […]
டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை முற்போக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட போதிலும் சம்பா தாளடி சாகுபடியில் […]
நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்திலேயே குன்னூர் பகுதியில் தான் அதிக பொழிவை தந்தது என்று கூறலாம். அதன்படி மழைப்பொழிவை நம்பி விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை பொழிந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலிலே உரை பனி […]
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையினரின் எதிர்பார்ப்புஎன்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நாட்டின் உயிர்நாடியாக திகழும்விவசாயத்துறை ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி பேருக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்துறை நாட்டின் வளர்ச்சியில் சுமார் 18% பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 6.3% ஆக இருந்த இத்துறையின் வளர்ச்சி விகிதம் 2019ஆம் ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த ஜனவரி […]
தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை, தமிழக அரசு ஏற்க்கக்கூடாது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் விளைநிலங்களை எண்ணெய் எரிவாயு போன்ற எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம் தேதி […]
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த வரி இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், உழவர்களுக்கு பாசன மின்சாரம் மற்றும் காப்பீட்டு நெல் கரும்பு ஊக்கத்தொகை நல வாரியம் கடன் தள்ளுபடி மானியம் பெற 6,100 கோடி […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி, கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில் சம்பா பயிர் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கூலி […]
இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]
மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார். இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி […]
மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. […]
நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகையை சுற்றியுள்ள பாலையூர், செல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நோயானது காலம் செல்லச் செல்ல பயிர் முழுவதிலும் பரவி பின்னர் நோயாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் அறுவடை காலங்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கூறப்படுகிறது. எனவே மஞ்சள் நோய் […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும், உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் […]
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு […]
உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு த்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். […]
வடமாநிலங்களில் நடப்பாண்டில் கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று நெல் பயிரிடும் பரப்பு 8.5 லட்சம் பேரில் இருந்து 10 லட்சம் ஹெக்டேராக […]
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கொட்டிய கன மழையால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்தால் நீர்மட்டம் ஒரே நாளில் 90 அடியில் இருந்து 96.4 அடியாக வேகமாக உயர்ந்தது. இன்று காலை வினாடிக்கு 1,508 […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
பாலக்கோடு தக்காளி சந்தையில் புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) மாபியா கும்பல் போல் செயல்படுவதாக தக்காளி விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், பெரியாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பாலக்கோடு தக்காளி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து நாளொன்றுக்கு 100 முதல் 150 டன் தக்காளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகள் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே படைபுளு தாக்குதலிலிருந்து மக்காச் சோளப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு படைபுளு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு தவிர்க்கும் பொருட்டு வேளாண்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பருவ மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யப்பட்ட பயிர்கள் 40 நாட்கள் கடந்த நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யூரியா வழங்கும் சமயங்களிலும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் புதூர் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் யூரியா விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி […]
நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து அப்பகுதிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு […]