மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த நெற்பயிருக்கு 30,000 ரூபாய் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் விவசாய […]
Tag: Farmers struggle
பாரத பிரதமரின் விவசாய நிவாரண தொகை வராத காரணத்தினால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதப் பிரதமரின் விவசாய நிவாரண தொகையான 2000 ரூபாயை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு தனியார் வங்கியில் தங்கள் கணக்கில் இரண்டு தவணைகளும் பிரதமர் விவசாய நிதி வரவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையூர் பகுதியில் இருக்கும் மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி விவசாயிகள் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பழுதடைந்த மின்மாற்றியின் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கலெக்டரின் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனவும், நீங்கள் அனுமதி வாங்கிய இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த […]
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைகடலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முக்கோணம், புக்குளம், கணபதிபாளையம், குடிமங்கலம் போன்ற பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவம் தவறி மழை பெய்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பனிகடலை என அழைக்கப்படும் கொண்டைக்கடலை மார்கழி மாதத்தில் தான் பூக்கள் பூத்து நன்கு செழித்து […]
டெல்லி விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள் விவகாரம் என்பதால், அதை பார்வையாளர் ரீதியில் அணுகுவோம் என இங்கிலாந்துக்கான இந்திய தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எது நடந்தாலும் அது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளிலும் இந்திய மக்கள் கணிசமான அளவிற்கு பரவி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 100 நாட்களாக இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ள நிலையில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் […]
அதிகமான உறைப்பனி காரணமாக ஊட்டியில் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அங்கு உள்ள புல்வெளிகள், செடிகள் மற்றும் வனப்பகுதிகள் வேகமாக கருகி கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடுமையான உறைப்பனி காரணமாக கேத்தி, பாலாடா, சோலூர், லவ்டெல், வேலிவியூ போன்ற இடங்களில் பச்சைப் பசேலென காட்சி அளித்த தேயிலைத் தோட்டங்கள் பனியின் காரணமாக […]