விவசாயிகள் மெயின் ரோட்டை நெல் களமாக பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் களங்கள் தற்போது பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பியதால் பொதுமக்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலைமையில் நெல் களம் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]
Tag: farmers wish
தண்ணீரில் மூழ்கி அழுகிய முட்டை கோஸுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த முட்டை கோஸ் தண்ணீரில் மூழ்கி அழுக ஆரம்பித்து உள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் அனைத்து மார்கெட்டுகளும் மூடப்பட்டதால் அறுவடை செய்த முட்டை கோசை விற்பனைக்கு கொண்டு செல்ல […]
50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் கனமழையினால் சேதம் அடைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சகாதேவன் பேட்டை, சுந்தரி பாளையம், கோழியனூர், பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் போன்ற பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் பயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையினால் அங்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து விட்டது. மேலும் அதில் இருந்த குலைகள் நன்றாக விளைந்து வந்த சமயத்தில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் […]
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் உலர் களத்தை சீரமைக்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் மக்காச்சோளம் மற்றும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை அங்குள்ள உலர் களத்தில் காயவைத்து, அதன் பின் விவசாயிகள் வியாபாரத்திற்கு அதனை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் குமரலிங்கம் ராஜ வாய்க்கால் கரையில் அமைக்கப்பட்டுள்ள உலர் களம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கின்றது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் நலனுக்காக […]