விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் சதி என கூறுவது முற்றிலும் தவறு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மத்திய அரசு வேளாண் சடங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் சதி என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற சொற்களை பயன்படுத்துவது பாவச் செயல் என்றும் […]
Tag: #Farmers_Protest
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர் உண்ணாவிரதம், மறியல், சுங்கச்சாவடி முற்றுகை என மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் 26 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் வேளாண் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளில் மேலும் ஒருவர் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 23 நாளாக போராடி வருகின்றனர். டெல்லியில் அதிகாலை நேரத்தில் நான்கு டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சரிவதால் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று பஞ்சாப்பை […]