ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட விளைபொருட்களின் விபரங்களை பார்க்கலாம் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பொருட்களை விற்பனைக்கு சந்தைக்கு அனுப்ப முடியாது சூழலில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களும் பறிக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்தும் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Tag: #farmersproblems
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து […]
நாகையில் பருத்திக் கொள்முதலின் போது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டாலுக்கு 5,800 ரூபாய் வரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் திடீரென்று வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு […]