இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பல வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியிருந்தாலும் அந்த அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யாமலிருப்பது, செயல்படாத பாஸ்டேக் வைத்திருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்திய டோல் பிளாசாக்களை FasTag வசதி பெருமளவு […]
Tag: #fastag
Fastag Recharge ஆன்லைனிலேயே ஈஸியாக செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் […]
தவறாகப் பாஸ்ட் டேக் வழியில் வந்தவர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூல் செய்யப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்த 18 லட்சம் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை இந்தியா முழுவதும் வேகமாகப் போக்குவரத்து முறையை அமலாக்கம் செய்யும் விதமாக […]
இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம் என நெடுச்சாலைத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதை தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த ஜன.,15ம் […]
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ 100 கட்டணம் தள்ளுபடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு பாஸ்டேக் (FASTag) முறையை கொண்டு வந்தது. அதன்படி வாகனத்தின் முன் பகுதியில் FASTag ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சென்று கொண்டே இருக்கலாம். காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவே சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக்கை அமேசான் மற்றும் எஸ்பிஐ, எச்டிப்சி மற்றும் ஐசிஐசிஐ, கோடக் மஹேந்திரா, […]
நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]