Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவர்கள்…. அச்சத்தில் பெற்றோர்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சி. அம்மாபட்டி இந்திரா காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சி. அம்மாபட்டி மற்றும் இந்திரா காலனிக்கு இடையே ரயில்வே தண்டவாள பாதை அமைந்துள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கும்,மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் இந்த தண்டவாள பாதையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று பாதை அமைத்து தருமாறு கடந்த சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மரத்தில் கிடந்த அழுகிய மான்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

சிறுத்தைப்புலி மானை கொன்று மரத்தின் மீது வைத்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேமுண்டி பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அம்பலமூலா பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் உயிரிழந்த மானின் உடல் கிடந்துள்ளது. இந்த மானை கொன்று வேட்டையாடிய புலி அதனை மரத்தில் வைத்து விட்டு சென்றதாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா நடந்து போகுது… வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பட்டப்பகலில் சிறுத்தை புலி ஊருக்குள் உலா வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் தனியார் பங்களாவிற்கு செல்லும் நடைபாதையில் பட்டப்பகலில் சிறுத்தை புலி ஒன்று நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தங்களது செல்போனில் சிறுத்தை புலியை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதோட 2 முறை நடந்துருக்கு…. அட்டகாசம் செய்யும் விலங்குகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் புகுந்த கரடிகள் பூஜை பொருட்களை அங்கும் இங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து சென்றுள்ளது. இதனை அடுத்து மறு நாள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பூஜை பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் . இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதுவரை 2 முறை கரடிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் சேர்ந்து கொன்னுட்டு…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் செந்நாய்கள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் எச். பி. எப் குடியிருப்பு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குளிர்ந்த காலநிலை இருப்பதால் செந்நாய்கள் இப்பகுதிக்குள் நுழைந்து விட்டன. இதனையடுத்து செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த கடமான்களை செந்நாய்கள் கொன்றுள்ளது. இது குறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் உலா வரும் யானைகள்… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏராளமான காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்கு ஊடுபயிராக வளர்க்கப்படும் பலா மரங்களில் பலாப்பழங்கள் தற்போது தொங்குவதால் காட்டுயானைகள் அதனை தின்பதற்கு வனப்பகுதியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து திடீரென […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா சென்ற காட்டு யானை… அலறிய வாகன ஓட்டிகள்… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிகாலை 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்துவிட்டது. இதனையடுத்து அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள சாலைகளில் அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்தவுடன் பொதுமக்கள் அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் காட்டு யானையை பார்த்த உடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை செதபடுத்திய யானை…. அலறி அடித்து ஓடிய பெண்…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தோட்ட தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகுனில்வயல் பகுதிக்குள் நுழைந்து  அங்கு பயிரிடப்பட்டுள்ள பாக்கு வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின் காட்டுயானை அப்பகுதியில் உள்ள மணியம்மா என்ற பெண் தோட்டத் தொழிலாளியின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல கொடிய விஷம் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த கட்டு விரியன் பாம்பு…. அச்சத்தில் நடுங்கிய பொதுமக்கள்….!!

கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பளம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் வீதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 நிமிடங்கள் போராடி புதருக்குள் பதுங்கியிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரத்தத்தை குடித்த சிறுத்தை…. இறந்து கிடந்த ஆடுகள்…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பகுதியில் துரைசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக வெளியே தோட்டத்தில் 3 ஆடுகளை கட்டிவிட்டு துரைசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து அதிகாலை ஆடுகள் திடீரென வித்தியாசமாக சத்தம் போட்டதால் துரைசாமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் பல இடங்களில் ரத்த காயங்களுடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை…. வீடுகளை முற்றுகையிட்டதால் அச்சம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டtதால்  பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்து லைன்ஸ், கார்வயல் மற்றும் கொள்ளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பாலவாடி லைன் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தனது குட்டிகளுடன் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் நுழைந்த காட்டு  யானைகள் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படிதான் பிடிக்கணும்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் புதிய திட்டம்…!!

வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாயை கவ்வி சென்ற கருஞ்சிறுத்தை…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. பதற வைக்கும் CCTV காட்சி….!!

கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எமக்குண்டு குடியிருப்பில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நாய் திடீரென மாயமானதால் அந்த நாயின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை மட்டும் பயிரிடாதிங்க…. இல்லேன்னா காட்டு யானை வந்துரும்…. இடம்பெயரும் வனவிலங்குகளால் பீதியில் பொதுமக்கள்…!!

வனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர ஆரம்பித்ததால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர ஆரம்பித்து விட்டது. இதனால் ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்ட காட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றிய தீ… வெடித்து சிதறிய பட்டாசு ஆலை… அடுத்தடுத்து விபத்துகளால் பதற்றம்…!!

பட்டாசு ஆலை திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதில் இருந்த மூன்று அறைகளில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழிமறித்து விரட்டிய காட்டு யானை… அலறியடித்து ஓடிய இளம்பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த யானை ஸ்கூட்டரை தாக்கிய வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி ஊராட்சி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஓன்று நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பயத்தில் அங்கேயே நின்று விட்டனர். இதனையடுத்து அந்த காட்டுயானை மெதுவாக சாலையை கடக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… வீடுகளை சுற்றும் காட்டு யானை… நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது. இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவல்…!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஜப்பானில் உள்ள நமீ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது நமீ நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடிகள்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை…!!

அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து மிகுந்த அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… நிலைகுலைந்த பொதுமக்கள்… தீவிரமாக கண்காணிக்கும் காவல்துறை…!!

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுமார் 3 மீட்டர் தூரத்தில் சிறுத்தை… திகைத்து நின்ற திவாகரன்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனச்சரகத்தில் கரடி, மான், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனசரகத்தில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த நாய்கள் குரைத்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரது மகனான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ கொம்பன் மறுபடியும் வந்துருச்சே… இனிமேல் என்ன ஆக போகுதோ… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஒற்றைக்கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மூன்று பேரை ஒற்றைக்கொம்பன் யானையானது ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்று விட்டது. இதனால் சுமார் மூன்று கும்கிகளுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதோடு அந்த ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஒற்றைக் கொம்பன் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து அடர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென வந்த சிறுத்தை… நடுங்கிய வாகன ஓட்டிகள்… அச்சமூட்டும் வன சாலை…!!

வனப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர் போன்ற பத்து வன சரகங்கள் இருக்கின்றன. அங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, மான், யானை, புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரண்டு பேர் இரவு 9 மணி அளவில் காரில் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரில் அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை இப்படி இருக்குமோ…. கிணற்று தண்ணீரை எரித்த சம்பவம்… அச்சத்தில் பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கிணற்றில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் கலந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான பனச்சமூடு, புளியூர்சாலை என்ற பகுதியில் கோபி என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்தபோது, தண்ணீரானது […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ந்த வீடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போண்டாகைடன் நகரிலிருந்து 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.௦ ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 139 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான தவாயோ நகரில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அதோடு […]

Categories

Tech |