அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் தீக்கிரையானது . அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில் 1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு […]
Tag: # Fire
மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர். மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (MTNL )கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் பதறிப்போயினர். அவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 14 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் உச்சியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் அவர்களை […]
சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே இருந்த பயிற்சி பள்ளி மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் , 20 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநித்தில் உள்ள சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் மின்சார கோளாறு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 3_ஆவது மற்றும் 4_ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் மீட்கப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று […]
ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திருச்சியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை சிஸ்கோ என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே அப்பகுதி மக்கள் தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]
ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்து 41 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையதிலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு,ஏரோபிளோட் விமானம் பயணிகளுடன் நேற்று மாலை கிளம்பியது. திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால் 41 பேர் உயிரிழந்தனர் .மேலும் இந்த விமானத்தில் 73 பயணிகளுடன் 5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.
கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர். கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர் . பின் தகவலறிந்த மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பெருமாள்புரம், என்.எச்.காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்தம்மாள்.இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது […]
கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கூலி தொழிலாளியாக பனிப்புரிகிறார் . இவரது மனைவி இந்துஜா 21 வயது .இவர்களுக்கு திருமணமாகி 2 வயதான ஹரிணி மற்றும் 4 மாதத்தில் சுகாசினி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்வதால் தனது […]
வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]
கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]
கரும்புத் தோட்டத்துக்குள் நுழைந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாகியது . மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் ஓன்று உள்ளது. இங்கு விவசாயிகள் நேற்று காலை கரும்பு அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கரும்பு தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பாம்பை கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, அங்கிருந்த ஒரு புதருக்குள் சென்றது. பாம்பை கொல்வதற்காக, செடியும், செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் அவர்கள் தீ […]