Categories
மாநில செய்திகள்

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து…. “மின்கசிவு தான் காரணம்”….. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்து நடந்த கீழ்த் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த கால்நடைகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் கொட்டகையில் ஏற்பட்ட  தீ விபத்தில் ஆடு, மாடுகள்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரைமாவட்டத்திலுள்ள  பொட்டிபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமாக 2  கொட்டகைகள் இருக்கின்றது. அங்கு ஆடு,மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது  கொட்டகையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஒரு மணி நேரம் போராடத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர சத்தத்துடன்….. வெடித்து சிதறிய மின்கலம்…… தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பு….!!

தெலுங்கானா ஸ்ரீசைலம்  நீர் மின் நிலையத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர் மின்நிலையத்தில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின் நிலையத்தில் இருந்து சில ஊழியர்கள் வெளியேறும் பதறி வெளியேறும் காட்சிகள்  பதைபதைப்பை  உண்டாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியன்று நள்ளிரவில் இதே மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஊழியர்கள் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது. இதை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக்கிடங்கில் பயங்கர தீ விபத்து… 3 மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்…!!

சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து….. 6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை….. சாத்தூர் அருகே சோகம்….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த சின்னகாமன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி சல்ஃபர் மற்றும் அம்மோனியம் நிறைந்து வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட அந்த அறை முழுவதும் தரை மட்டமானது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் – காப்பாற்றிய உறவினரும் படுகாயம்..!!

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற போது சகோதரரும் , காப்பாற்றிய உறவினரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (39). இவர், திருமணம் நடைபெறாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், மகேஷ் திருவள்ளுவரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா(36) வீட்டிற்கு துக்க காரியத்துக்கு வந்துள்ளார். அங்கு குடிக்க பணம் கேட்டு, தனது சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்… கிறிஸ்தவ தேவால காப்பகத்தில் தீ விபத்து… 15 குழந்தைகள் பலி.!

ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்திற்கு சொந்தமான காப்பகம் ஓன்றில் பல குழந்தைகள் தங்கியிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உடல் […]

Categories
கரூர் திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!!

திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….!!

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் படகுவீடுகளில் தீவிபத்து… குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!!

அமெரிக்காவின் நதி கரையோரம் அமைந்திருந்த படகு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும், சிலர் வாரதின் இறுதி நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 : 40 […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்து….. உயிரை பணயம் வைத்து….. 10 பேரை காப்பாற்றிய….. 12 வயது சிறுமிக்கு வீர தீர விருது…!!

மும்பையில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில்  55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ATMல் தீ விபத்து…… பணத்துக்கு என்னாச்சு……. பதறிய வங்கி ஊழியர்கள்….!!

விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]

Categories
தேசிய செய்திகள்

“தீ விபத்து” 30 தீயணைப்பு வண்டி இருந்தும்……. 43 பேர் பலி……. டெல்லியில் பயங்கரம்….!!

டெல்லியில் இன்று  அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  இது வரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனோஜ் மண்டி என்னும்  இடத்தில உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு   ஒன்றில் இன்று  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  இதுவரை 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தத் தீயை அணைப்பதற்கு அதிகாலை முதல் தீயணைப்பு துறையினர்  முயன்று வருகின்றனர். தற்பொழுது தீயை அணைக்க 30 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டிருப்பது […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து… திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீபாவளியன்று 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து.!!

டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ பாவம்… மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… “5 மாத குழந்தை பரிதாப பலி”…. 5 குழந்தைகள் தீ காயம்..!!

தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து….. ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் உயிர் தப்பிய மாணவர்கள்….!!

நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …!!

தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிர் தப்பிய 400 பேர் ……. தேனி மசாலா கம்பெனியில் தீ விபத்து ……!!

தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது அருந்த பணம் தரல….. விரக்தியில் தீக்குளித்த கணவன்….. உடல் கருகி மரணம்….!!

மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு  மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை தனியார் பேருந்தில் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்..!!

சென்னை தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.    சென்னை பெருங்களத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லுரி பள்ளி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ  இடத்திற்கு வந்த தீயணைப்பு  துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில்  தனியார் பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
தேசிய செய்திகள்

“மும்பை ஓ.என்.ஜி சி ஆலையில் பயங்கர தீ விபத்து”… தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் பலி.!!

மும்பை அருகே ஓ.என்.ஜி சி நிறுவன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 45 கி.மீ தூரம் உள்ள  யுரானில்  ஓ.என்.ஜி சிக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை ஒரு பகுதி திடீரென தீ பிடித்து பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு  கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“SDPI” நிர்வாகிகளின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள்… CCTV மூலம் விசாரணை..!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘குடோனில் தீ விபத்து’ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகின..!!

எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. சென்னை போரூர் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம்  பகுதியைச் சேர்ந்த விஜய் வேதமூர்த்தி என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் நிகழ்ச்சிக்கு  தேவையான பொருட்களை கொடுப்பதும், மணமகன் அலங்காரம் செய்யும் தொழிலயையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வேதமூர்த்தி அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலையில் தனது குடோனில் ஏராளமான  பொருட்களை வைத்திருந்தார். நாளை நடைபெற இருக்கிற ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு ஊழியர்கள் குடோனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.   ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். சிறிது […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து” 6 பேர் பலி… 11 பேர் படுகாயம்..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.  டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி..!!

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஓய்வுபெற்ற கேப்டன் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மட்டக்கடை  சேர்ந்த ஓய்வு பெற்ற கேப்டன் ஸ்டீபன் என்பவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  அவர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து எட்டி பார்த்துள்ளனர். அப்போது குளிரூட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுப்படுத்தினர். வீட்டினுள் ஸ்டீபன்  மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து  10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக  […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் “துணை மின்நிலையங்களில் தீ விபத்து” மின் விநியோகம் நிறுத்தம்..!!

அமெரிக்காவில், இரு துணை மின்நிலையங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தின் மாடிசான் நகரில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரு துணை மின் நிலையங்களிலும் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பயங்கரமாக தீப்பற்றி எறிந்தது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்தனர். உடனே பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை மின் ஊழியர்கள் நிறுத்தினர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சுகந்தலையில் தீடிர் தீ விபத்து …. பீதியில் உறைந்த மக்கள் …!!

சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின்  காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர்  யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது. சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பிரிட்ஜ் வெடித்ததில் டிவி ரிப்போர்ட்டர் உட்பட 3 பேர் பலி..!!

சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை “பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் விபரீதம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று  திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பஞ்சு குடோனில் பற்றி எரிந்த தீ “1,00,00,000 மதிப்பிலான பொருள்கள் சேதம் !..

கோவையில் பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   கோவை மாவட்டத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு  குடோனில் வடமாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர […]

Categories
தேசிய செய்திகள்

சூரத்தில் தீ விபத்து “20_க்கும் மேற்பட்டோர் பலி” நெஞ்சை பதைக்க செய்யும் வீடியோ….!!

சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே இருந்த பயிற்சி பள்ளி மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் , 20 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநித்தில் உள்ள சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள  வணிக வளாகத்தின் மாடியில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் மின்சார கோளாறு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 3_ஆவது மற்றும் 4_ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் மீட்கப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பனியன் அட்டை கிடங்கில் தீ விபத்து….!!

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும்  முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 10,00,000 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…திருப்பூர் அருகே பரபரப்பு …!!

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே  தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆலையில் தீ விபத்து..! அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

   அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து   விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள   கள்ளங்குறிச்சி சாலையில் அரசாங்கத்திற்கு  சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி      வருகிறது. இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலைகள்  நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று […]

Categories

Tech |