டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]
Tag: fireworks
தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாட ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் பட்டாசு வெடிப்பதில்லை. காரணம் ஒலி மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு புகையிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து சில வழிமுறைகளை கையாளலாம்’ என்று குறிப்பிட்டு அவர் வழங்கியுள்ள டிப்ஸ்: பட்டாசு நம் கண்களில் […]
சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]
பட்டாசு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உச்ச நீதிமன்றம் விதித்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. காலை , மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக் கூடிய சூழ்நிலையில் பட்டாசு […]
கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் தேனீக்களுடன் தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர் தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய வெகுவிமர்சையாக இத்திருவிழா […]
சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன், சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து , வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]