கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கப் போவதாக கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் முருகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவரைத்தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்களால் முருகனை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மீனவர் முருகனின் உடலானது கரை ஒதுங்கியதை கண்ட […]
Tag: #Fisherman
சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த சாக்குப் பையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததையடுத்து, அதனை தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. […]
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]
மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்படுவதாகும் , மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை […]
ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]
ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லை தாண்டி செல்வது, புயலில் சிக்கி காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனில் […]
14 மாத சிறை தண்டனைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு செல்ல முடியாமல் தனித்து வந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனை காலம் முடிந்த பிறகும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை. பின் […]
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]
ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட […]
தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளைச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்க […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 132 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ஒரு விசைப்படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கோட்டை பட்டினத்தில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு 11.31 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எந்த எச்சரிக்கையும் அளிக்காமல் விசைப்படகையும், 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். […]
உத்திரபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்திரபிரேதச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றனர். இந்நிலையில் போபாலில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாது போபால் அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்த சிவா, காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர்.அப்போது திடீரென 3 மதகுகள் வழியாக தண்ணீர் […]
மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்திக்கு முன் தேதி தேதியிட்டு ஜிஎஸ்டி வசூலிக்க திட்டமிடும் மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன் எண்ணை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இதுவரை மீன் தூள் மற்றும் மீன் […]
புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் […]
எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம் கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 9 நாட்களுக்கும் மேலாக நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர். இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
பெட்ரோலை குடித்து டென்னிஸ் என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து வருபவர் டென்னிஸ். வழக்கம்போல் மீன்களை வியாபாரம் செய்து கொண்டு வரும் வேளையில் அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார் அந்த பாட்டிலில் காருக்கு பயன்படுத்தும் பெட்ரோலானது நிரப்பப்பட்டிருந்தது அதனை டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் […]