நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]
Tag: Fishermen
கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக […]
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]
கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல […]
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது; கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் […]
படகு கவிழ்ந்து 13 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 6 பேரை சக மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 3 மணியளவில் டோமினிக் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற டோமினிடக், ராஜ், இசக்கி ராஜா, ராஜ், சூசை, இளங்கோ ஆகிய ஆறு மீனவர்கள் கூடங்குளம் அருகே 16 நாட்டிக்கல் மைலின் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் அதிகக் காற்று வீசியபோது படகில் ஏற்பட்ட ஓட்டையால் […]
மீனவர் கொலையில் குற்றவாளிகளை, உடனே கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி குருசுகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். நேற்று காலை, இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று காலை குருசுகுப்பம் மீனவர்கள், லோகநாதனின் உறவினர்கள் பட்டேல் […]
புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள […]
வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை […]
கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]
உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை […]
“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]
வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். கடந்த 4_ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு 5 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் அப்படின்னு கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக […]
வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் இதனால் தமிழகத்தை பாதிக்குமா என்று மக்களின் கவனம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் உருவாக இருப்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் […]
நாளையத்தினம் வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்த்தகியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில் , நேற்று வங்கக்கடலின்அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும். தற்போதைய […]
புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறும் போது , புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். அதே போல தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும் செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த […]
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்து செல்கின்றனர். இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு […]
தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் , தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதோடு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை […]
ரஷ்ய நாட்டிற்கு உளவு பார்த்து வந்த பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள் கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள் அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர். அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் […]
இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில் சென்று மீன்பிடிப்பது அவர்களது வழக்கம் . அப்போது எதிர்பாரத விதமாக இலங்கை எல்லைக்குள் செல்வதும் உண்டு. மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். அவர்களின் விசைப் படகுகளையும் சேதப்படுத்தி கைது செய்கிறார்கள். இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை […]