மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங்கிற்கு உத்தரகாண்ட் செல்வதற்காக விமானம் வழங்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்காததால் ஆளுநர் பகத்சிங் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநில அரசின் இந்த செயலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து உத்தரகாண்டிற்கு செல்வதற்காக அரசு விமானத்தை முன்னதாகவே […]
Tag: Flight
கைக்குழந்தை விடாமல் அழுததால் பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு அதன் பின்னர் மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 106 பயணிகளுடன் பகல் 12:15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் வசித்து வரும் லட்சுமி தேவி-ராகுல் தம்பதியினரும், அவர்களது நான்கு மாத பெண் குழந்தையுடன் அந்த விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அதன் பின்னரே டெல்லி செல்வதற்காக […]
இந்தோனேசியாவில் கடலுக்குள் விழுந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு ஸ்ரீவிஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் .737-500 ரக விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டது ஆனால் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இழந்துவிட்டது. இதனால் ஜாவா கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து விமானத்தின் […]
சாதாரண மக்களும் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் உதான் திட்டம். இந்த திட்டம் தமிழகத்திலும் அமலில் உள்ளது. இதன் படி, உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8:15 மணிக்கு சேலம் வந்து சேரும். பின் சேலத்திலிருந்து 8:30 மணிக்கு புறப்பட்டு 9:15க்கு சென்னை வரும் என […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கேரளாவைப் பொறுத்தவரையில் அப்பகுதி மக்கள் கொரோனா, மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் ஒருபுறம் அவதிக்குள்ளாகி வந்த சூழ்நிலையில், இந்த விபத்து அவர்களிடையே பெரிய அளவிலான பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு […]
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும் வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான். உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் […]
விமானத்தில் முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளை ஊழியர்கள் குண்டுகட்டாக தூக்கி விமானத்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக பொதுமக்கள் தாமாக பொது இடங்களில் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள […]
அமெரிக்காவில் 99 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது வயது மதிக்கத்தக்க மூதாட்டியான ரூபினா என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்சிபல் விமான நிலையத்தில் நெக்ஸ்ட் ஜன் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பாகவும், அதை இயக்குவது தொடர்பாகவும் பாடத்தை விளக்கி மாணவர்களுக்கு கூறினார். இதை தொடர்ந்து அவர் விமானத்தை இயக்கி வானில் பறந்தும் அங்குள்ளவர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே 99 வயதில் விமானத்தை இயக்கியவர், […]
சமூக இடைவெளியுடன் விமானத்தில் பயணம் செய்யும் முறையை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊராடங்கிற்கு பின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி உத்தரவிட்டு உள்ளது. விமானத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக […]
கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக […]
விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி. அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் […]
சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம் பயின்று வருகின்றார். தியான்ஜின் நகரத்திலிருந்து விமானம் மூலமாக வியாழக்கிழமை தாயகம் திரும்பியுள்ளார். பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி உள்ள நிலையில் அங்கிருந்து வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தியான ஜின்னிலிருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்திருக்கிறார். விமானத்தில் […]
ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித அச்சத்தில் இருப்பார்கள் . காரணம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான். சில சமயங்களில் இன்ஜின் கோளாறு, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழக்க நேரிடும். அதே சமயம் விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிரும் தப்பியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் ஈரானின் மசாஹா் […]
ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு சென்ற பொறியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். 42 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணம்செய்ய நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் சென்றடைந்தது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். […]
அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியில் விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]
ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சேவையை 6 விமான நிலையங்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட உள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்திய அதிகாரிகள், தற்போதைய நிலையில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் […]
சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சீனாவின் லியோனின் மாகாண தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின் கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள் தலைகீழாக பறந்தும் […]
கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]
இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல் பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு […]
மும்பையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வந்தது கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு […]
மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை […]
மும்பையில் தொடரும் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அங்குள்ள தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.பல்வேறு பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவை முடக்கம் : மும்பையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து , விமான போக்குவரத்து மற்றும் […]
மும்பையில் தொடரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை கனமழை குறித்து வானிலை ஆய்வு மையமும் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கும் அளவிற்கான தொடர்மழை காரணமாக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார் கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 13 மற்றும் 14 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக இந்திய விமானங்கள் எல்லை பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பு வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் அவ்வழியாக செல்வதற்கு இந்தியா […]
பிரதமர் மோடியின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்க்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை சமீபத்தில் தான் வரும் 15-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தானுக்கு விமானம் மூலம் […]
புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]