ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிக மோசமான பழக்கம். ஒருமுறை சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு ஏற்றி சாப்பிடுவது. இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலும், ஒரு சில உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால், பக்க விளைவுகளையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி ஏராளமான மருத்துவ செலவுகளை நமக்கு இழுத்துவிடும். […]
Tag: #FoodPoison
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.
மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!
அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த 5 பசுமாடுகள் நுறை தள்ளிய படி மர்மமாக இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் கிராமத்தில் கோபி என்ற விவசாயி ஏழு பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார். தீவனத்தை உண்ட மாடுகளில் 5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால் 5 மாடுகளும் கீழே விழுந்து இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது . மேலும் பாதிக்கப்பட்ட […]
ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிசாங்கர் நகரில் உள்ள ஒரு திருமண விழாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர் பங்கேற்று நடைபெற்ற விருந்தில் உணவு உட்கொண்டனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டடு அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]