இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் […]
Tag: Football
சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின் கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]
சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன் அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் காரணம் மக்கள் […]
கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]
அர்ஜென்டினாவின் மகளிருக்கான ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்பதற்கு திருநங்கை மாரா கோம்ஸிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான். 2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது […]
ஏ.எஃப்.சி. கோப்பை பரோ அணியை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி. அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் ஏ.எஃப்.சி. கோப்பைத் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. இதன் நேற்றைய போட்டியில் இந்தியாவின் பெங்களூரு எஃப்.சி. அணி, பூடானின் பரோ அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையே முன்னதாக நடந்த ஆட்டத்தில் பெங்களுரூ எஃப்.சி. அணி 1-0 என்ற […]
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலைவகித்தது. இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே […]
ஃபியோரெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள் உள்பட 3-0 என்ற கணக்கில் ஜுவண்டஸ் அணி வெற்றிபெற்றது. சீரி ஏ லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து ஃபியோரெண்டினா அணி ஆடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜுவண்டஸ் அணிக்கு முன்னால், ஃபியோரெண்டினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனிடையே முதல் பாதியின் ஜுவண்டஸ் அணிக்கு 40ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நட்சத்திர வீரர் […]
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்று முன்தினம் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி 6-3 என்ற கோல்கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ (rafael crivellaro) ஆட்டத்தின் 39’ஆவது, 45+1’ஆவது நிமிடங்களில் […]
இந்தியாவின் நட்சத்திர கால்பந்துவீராங்கனை பாலா தேவி, இந்தியாவை விட்டு வேறொரு அணிக்காக கால்பந்து விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கால்பந்துவீராங்கனையாக வலம்வருபவர் மனிப்பூரைச் சேர்ந்த பாலா தேவி. இந்திய அணியின் அதிக கோல் அடித்த வீராங்கனையாக வலம்வரும் தேவி, தற்போது ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ரேஞ்சர்ஸ் கிளப் அணிக்காக 18 மாதங்களுக்கு ஒப்பந்தமாகவுள்ளார். இதன்மூலம் இந்தியா சார்பாக வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு ஒப்பந்தமாகவுள்ள முதல் வீராங்கனை என்ற […]
சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள். அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த […]
பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]
பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடரில் ஆக்ஸ்பெர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணி வீரர் எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 2019-20ஆம் ஆண்டுக்கான பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடர், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணியை எதிர்த்து ஆக்ஸ்பெர்க் அணி விளையாடியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஆக்ஸ்பெர்க் அணியின் ப்ளோரியன் 34ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதையடுத்து நடந்த இரண்டாம் […]
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என்று செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கற்றுத் தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சர்வதேச கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சீரி ஏ லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் சாம்ப்டோரியா அணியை வீழ்த்தியது. […]
I S L கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்சை வீழ்த்தி சொந்த மண்ணில் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் போட்டி ஆட்டத்தில் சொந்த மண்ணில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி,மற்றும் கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 4-வது […]
இந்த சீசனுக்கான ஐஎஸ்எல், ஐ லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் பங்கேற்கலாம் என ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போலவே கால்பந்துப் போட்டிக்கும் இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் ஆகிய தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட […]
பிலப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய கால்பந்துத் தொடரில் தாய்லாந்து – வியட்நாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு […]
ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார். அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் […]
லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியிடம் தோல்வியடைந்தது. லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை எதிர்த்து லெவாண்டே அணி மோதியது. இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நட்சத்திர அணியான பார்சிலோனா களத்தில் தீவிர ஆக்ரோஷத்துடன் செயல்பட்டது. = முதல் பாதியின்போது பார்சிலோனா அணியின் ஆர்தர், நெல்சன், சமீடோ ஆகியோர் மெஸ்ஸிக்கு பந்தை பாஸ் செய்து […]
ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில், இந்தியாவில் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தொடரின் ஆறாவது சீசன் இன்று கொச்சியில் கோலகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதலில் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் கேரளா அணி இரண்டு […]
பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய கால்பந்து லீக் தொடரில் அதிக கோல்களை அடித்து ஆறாவது முறை கோல்டன் ஷூவை கைப்பற்றினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் கால்பந்து விளையாட்டு வீரர் பார்சிலோனா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் 36 கோல்களை அடித்து லீக்கின் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இதன் காரணமாக இன்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து […]
கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார். அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக […]
தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில் இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]