புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை நான்குவழிச்சாலை மருதுபாண்டியர் சிலை அருகில் இரண்டு கால்களும் ஒடிந்த நிலையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையை கடக்கும் போது […]
Tag: forest
மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது. அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை […]
4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியில் பல்வேறு அரிய வகை மரங்கள் இருக்கும் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது கரடி, முயல், மான் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தினாலும், கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வரண்டு போய் இருந்துள்ளது. இதனால் நெருஞ்சிப்பேட்டை […]
கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்காங்கே காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மிகப்பெரிய பேரிடர் வருங்காலத்தில் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பல நாடுகள் மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும், பல பகுதிகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் பல, மரங்களை வளர்க்க ஊக்குவிக்கும் விதமாக, தனி காடுகளை வளர்த்து நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் […]
திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு சுற்றி திரிவதால் ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி, வெங்கடேசன், திருப்பதி உள்ளிட்டோர் வளர்த்த மூன்று ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன் கொடூரமாக கடித்து குதறியநிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஊர்மக்கள் சிறுத்தை தான் ஆடுகளை கடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஆராய்ந்தபோது […]
நெல்லை அருகே செல்பி எடுக்க சென்ற சமயத்தில் காட்டில் தொலைந்த வாலிபரை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியை அடுத்த ரோஸ் மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாக உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கே வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அந்த வகையில் சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், சுமேஷ் ராஜேஷ் […]
வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை […]
ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]
செங்கல்பட்டு அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சாலை முழுவதும் கருப்பு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே குப்பை கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து அருகிலுள்ள காட்டிற்கு தீ பரவி சில மரங்கள் எரிய ஆரம்பித்தன. மத்திய சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் கரும் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]
ஓசூர் அருகே காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனத்தில் தஞ்சம் அடைந்திருந்த காட்டு யானைக் கூட்டம் மூன்று தினங்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் அந்த யானைகள் முழுவதும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும் அதிக சத்தம் எழுப்பியும் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் அருகில் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]
கோவை சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாநிலத்தில் ஆலந்துறை, ஓடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டிராம்டிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சுயம்பு, வெங்கடேஷ் என்கின்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரபட்டன. இந்நிலையில் வெங்கடேஷ் என்கிற கும்கி யானை இன்று காலை முகாமில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. […]
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல MAN VS WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி தோன்றவிருக்கிறார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான் தைரியமும்,அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே காட்டில் பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவும். அப்போது போது கூட மோடி அவர்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும காணப்பட்டார். கடுமையாக மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. பாதுகாப்பு குழுவினர் கொடை […]
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து 2 யானைகள் பாதைத் தெரியாமல் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் ,மூலிகைகள் மற்றும் செடிகளும் எரிந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில் யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில் காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல் யானையொன்று தனது குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக சென்றது.இந்நிலையில் வனத்துறையினர் , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]