சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]
Tag: #forestofficers
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுமார் 1411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தலமலை வனச்சரகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் அவ்வப்போது சாலையோரங்களில் ஓய்வெடுக்கவருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் திப்புசுல்தான் சாலையில் மரத்தினடியில் புலி ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. […]
கோவையில் குடியிருப்பு பகுதி ஒன்றின் பாத்ரூமில் கருநாகம் பதுங்கி இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கழிவறையில் பதுங்கியிருந்த கருநாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி கழிவறைக்குள் மூன்றடி நீள பெரிய கரு நாகம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பாம்புகளின் நிபுணரான SNAKE சரண் என்பவர் வந்து நீண்ட கம்பின் உதவியுடன் பாம்பை பிடித்து பிறகு அதனை செட்டிபாளையம் வனப்பகுதிக்குள் கொண்டு […]
உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உதகையிலிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டுயானைகளும் வனவிலங்குகளும் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் குஞ்சப்பனை என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அங்கு சில மணி நேரம் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிதானமாகவும், […]
கோவை சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாநிலத்தில் ஆலந்துறை, ஓடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டிராம்டிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சுயம்பு, வெங்கடேஷ் என்கின்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரபட்டன. இந்நிலையில் வெங்கடேஷ் என்கிற கும்கி யானை இன்று காலை முகாமில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. […]
பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும் கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா […]
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை பகுதியில் 13 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன .மேலும் யானைகள் ஆந்திர மாநிலத்தின் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் அதிகமாக வலம் வருகின்றன மேலும் அவ்வபோது வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில் 7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட […]