நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]
Tag: #Forests
குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே 20 பேரைத் தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவம் அருகே யூக்கலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கி இருந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தை உயிருடன் பிடிக்க வேண்டும் என நினைத்த […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]
கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று […]
நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]