“பிடிக்காத நபரிடம் ஒதுங்கி அமைதியாக இருப்பேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பள்ளி மாணவியின் கேள்விக்கு கூலாக பதிலளித்த வீடியோ காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த்தும் குரல் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள பஜார் பகுதியில் தனது நண்பரின் தனியார் வாட்ச் கடையில் தனது நேரத்தை கழித்துவரும் ரங்கசாமியிடம் […]
Tag: #FormerCM
ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]
தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறி சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த பாபுலால் கவுர் (வயது 89) 2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]