அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை 45 ஆயிரம் பணத்தை மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா. இந்நிலையில் சாந்தி கடந்த சில நாட்களாக தனது மகன் சூர்யாவிற்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வருகிறார். அந்த சமயத்தில் சாந்திக்கு இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த சமயத்தில் […]
Tag: Fraud
கார் வாங்கித் தருவதாக கூறி தம்பதியினர் இரண்டு லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழதேவதானம் மாதா கோவில் சந்தைப் பகுதியில் அருள் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதூர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரும் அவரது கணவன் முருகானந்தம் என்பவரும் கார் வாங்கி தருவதாக கூறி அருள் முருகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி அருள் முருகனுக்கு காரை வாங்கி கொடுக்கவில்லை. இதனை […]
ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டியை சார்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்பதற்காக புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்வது உண்டு. அதிலிருந்த ஒரு மனுவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியிலுள்ள 15 திற்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வரும் ஆசிரியர்களிடம் சேர்ந்து மாதந்தோறும் […]
சென்னை அருகே போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், பலர் வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் சூழ்நிலையில், ஒரு சிலரோ மக்களிடம் எப்படி ஏமாற்றி காசு பறிக்கலாம் என்று சிந்தித்து மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் […]
தஞ்சையில் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்து வரும் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்த ஆயூப் என்பவர் ஊரடங்கு காரணமாக கப்பலில் ஏதும் பணி இல்லாததால், தனது சொந்த மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 4 தவணையாக ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணக்கு […]
இணையதளத்தில் வரன் பார்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறையினர் வெளியிட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உற்றார் உறவினர்களின் அறிவுரைப்படி சொல்கின்ற இடத்தில் பெண் பார்ப்பதை விட்டு, சுயமாக முடிவு எடுப்பதாக எண்ணி பலர் ஆன்லைனில் பெண் தேட ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக இது ஒரு தவறான செயல் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முக்கியமான நிகழ்வு திருமணம் தான். அதை மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறாக அமைத்துக் கொள்வதை காட்டிலும், தனக்கு தானே தேடி மணம் […]
காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), சரவணராஜி (25), சிவகுமார் (24) ஆகிய 3 பேரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய 2 பேர் அவர்களிடமிருந்து 2,25,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, இந்த […]
வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய […]
டிக்டாக் மூலம் பேசி பழகி இளைஞரை மயக்கி 97,000 ரூபாய் மோசடிசெய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் […]
பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் OLX ஆப் மூலமாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப் மூலமாக மோசடி நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு ஏராளமான புகார் வந்தன. இது தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மோசடி கும்பலை ராஜஸ்தானிலிருந்து செயல்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு உள்ள கிராமத்தில் உலாவிய அவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக நரேஷ் பால் சிங் […]
கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் நண்பரான ஹரிதாஸ் […]
காஞ்சிபுரம் அருகே இருக்கசக்கர வாகன விற்பனை மூலம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா புரத்தில் இரண்டு சக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வரும் மகேந்திரன் என்பவர் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டு வாடிக்கையாளர்கள் முழு தவணைத் தொகையையும் மகேந்திரனிடம் செலுத்திய பின்பும் கூட அவர் கடன் அளித்த நிதி நிறுவனங்களுக்கு அதை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் முழு கடன் தொகையை செலுத்திய பிறகு […]
விழுப்புரம் அருகே ஆவின் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ரூ14,00,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு ஊர் மக்களுக்கு அருள் வாக்கும் சொல்லுவார். பூண்டி கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவர் மூலமாக சென்னையைச் சேர்ந்த குலாப் சிங் என்பவரது பழக்கம் செல்வத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் குலாப் சிங் ஆவின் கம்பெனியில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து […]
ஆள்மாறாட்டம் மூலம் 2 கோடிக்கு நிலத்தை விற்பனை காவலாளி மற்றும் வக்கீலை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத்தை சொந்த மாநிலமாக கொண்ட சோனலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதற்கு காவலுக்கு விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில் செய்யாறு அருகிலுள்ள வட்டாரம் பகுதியில் உள்ள பெருமாள் எனும் வக்கீல் திருகழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோனலிசா என்று போலியான நபரை அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சோனலிசா அதிர்ச்சியடைந்து காஞ்சிபுரம் பொலிஸ் […]
தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் […]
குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை சி.பி.சி.ஐடி நாடியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் […]
இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மீது மோசடிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுரையாளர் டாக்டர். எஸ். ஆனந்த் விவரிக்கிறார். வணிகங்கள் தனது அன்றாட செயல்பாட்டில் பல அபாயங்கள், சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் பலவும் அவற்றின் லாபம், இழப்பு அல்லது அவற்றின் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்ப்பு வழக்கமாக ஆரம்பத்தில் எந்தவொரு வணிகமும் அபாயங்களுடன் மட்டுமின்றி அவற்றின் சாத்தியமான லாபங்கள், இழப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகள் பொதுவாக அவற்றின் பல செயல்பாட்டு […]
விழுப்புரத்தில் ட்ரையல் பார்ப்பதாக கூறி விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் . விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ப்ளூ ஸ்டார் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலையம். அங்குள்ள தொலைபேசி எண்ணை 9 ஆம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஞ்சிவ் என்றும், தாம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கும் […]
செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பகுதியில் மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . விரைந்து […]
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளனர். நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூபாய் 8 லட்சத்திற்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார். அப்போது, வெங்காயம் அனுப்பியவரின் வங்கிக் கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுநர் பிரகாஷ், தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கிக் கணக்கு எண் என நினைத்து, ரூ.8 […]
மதுரையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வட்டியில்லா பணம் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை tpm நகரில் உள்ள பாண்டியன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செல்வி என்பவர், அரசியல்வாதிகள் சிலரின் பினாமி என்று தனது அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர்களின் கருப்பு பணம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெள்ளையாக மாற்றவே வட்டியில்லாமல் கடன் கொடுப்பதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சம் […]
கள்ளக்குறிச்சி அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தலைமறைவான கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த ஒரு கும்பல், அந்தப் பகுதி மக்களிடம் 100 நாள்கள் பணம் கட்டினால், கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி வசூல் செய்துள்ளனர்.இதில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துவந்த, அந்த ஐந்து பேர் […]
சென்னை தலைமை காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு […]
தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில் அந்த ஏடிஎம்க்கு கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]
உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். […]
மேற்குவங்கத்தில் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் […]