ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக திரட்டப்பட்ட காசோலைகளில் 15000 காசோலைகள் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நன்கொடை நாடு முழுவதும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு திரட்டியுள்ளது. இன்னும் கட்டுமான பணிக்காக பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திரட்டப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. அதன்படி திரும்பிவந்த காசோலைகளின் மதிப்பு ரூபாய் 22 கோடி ஆகும். […]
Tag: Fund
யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார் இவர் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]
கொரோனா நிதிக்காக ஓராண்டிற்கு மாதம் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு நிதிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில், மேலும் நிதி தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் […]
பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]
ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள்களை கட்டுவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் […]