Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல்சீற்றம் தணிந்தது …மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர் !!!

நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக  9 நாட்களுக்கும் மேலாக  நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர். இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  

Categories

Tech |