குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேகரமாகும் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் அங்கு ஈக்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு ஆகியவை […]
Tag: #garbage
கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூரில் இருந்து திருமலாபுரம் வழியாக சிவநாடானூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை ஓரங்களில் கேரளாவிலிருந்து வரும் எலெக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் கழிவுகள் பல நாட்களாக கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிட்டது. இதனால் அங்கு வசிக்கும் […]
பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிரம்பிய குப்பைகளை எடுக்காமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால் குப்பைகள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை […]
சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது. இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது. இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. […]
குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் எங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி உண்டு அதை செய்யக்கூடாது எனில், மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவ வேண்டும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த ரெட்டிதோப்பு, தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வேலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் ஆலோசனைகளின் படி பல்வேறு மாறுதல்கள் செய்து திட்டத்தை ஆம்பூர் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. […]
செங்கல்பட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளிடையே குப்பைகளை கொட்டக்கூடாது என பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொட்டப்பட்டு பின் தரம் பிரிக்கப் படுகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே […]
ரயில் நிலையத்தில் யாரும் குப்பையை கொட்டினால் 5000 அபராதம் விதிக்கப்படுமென்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் பராமரிப்பின்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து நாடுமுழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு , ரெயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைத்ததோடு இந்தியா முழுவதும் உள்ள சுமார் 720 ரெயில் நிலைய […]
வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது . வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் […]