Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடும் மர்ம கும்பல்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த மாதம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆறுமுகம் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கடந்த மாதம் 24ம் தேதி திருடப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. இதையடுத்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” ரூ2,00,00,000 தாண்டிய வர்த்தக பணம்…….. களை கட்டிய ஆடு விற்பனை…!!

நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்…!!!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை “விவசாயிகள் கதறல் ..!!

கோபிச்செட்டிப்பாளையத்தில் மந்தைக்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மந்தைக்குள்  புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகளை தாக்கியது. இந்த தாக்குதலில் சுமார் 11 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அதன்பின் ஆடுகளின்  உரிமையாளரான ரவி மந்தையில் உள்ள ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றதாக வனத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் இறந்த ஆடுகளுக்கு உரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி  விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்  செல்வி. இவர் நேற்று மாலை தனது  ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில்,    ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து  தகவலறிந்த  தீயணைப்புத்துறையினர்,  இரவு நேரம் என்றும் பாராமல் ,  கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன்  மீட்டனர். […]

Categories

Tech |