மர்ம நபர்கள் விநாயகர் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவிடு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலையின் தலை பகுதி மட்டும் உடைக்கப்பட்டு மாயமானதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் விநாயகர் சிலையின் தலைப் பகுதியை உடைத்து அதனை அங்கிருந்த […]
Tag: god statue
பூமிக்குள் வைக்கப்பட்ட நவதானிய காளியம்மன் சிலை 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் மார்க்கெட் குமரன் தெருவில் 250 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவதானியம், மூலிகை மற்றும் அத்திமரத்தூள் ஆகியவற்றால் செய்த காளியம்மன் சிலையை வழிபட்டு வந்துள்ளனர். இது நவதானியத்தால் உருவான சிலை என்பதால் அபிஷேகம் செய்ய இயலவில்லை. இதனால் சிலர் நவதானிய சிலையை கருவறைக்கு கீழே பூமிக்குள் புதைத்து […]
புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி குலத்து ரவுண்டானாவில் கிரானைட் கல்லால் ஆன வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த வேல் சிலையை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான முருகேசன் என்பவர் மதுபோதையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய வேல் சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி பழனி குளத்தூர் ரவுண்டானாவில் புதிதாக […]
பறக்கும் படையினர் 60 கிலோ எடை கொண்ட சாமி சிலைகளை காரில் கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி விருதாச்சலம் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. இங்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து சாமியை தரிசித்து விட்டு […]