நிர்வாகம் : அரசு தாய் சேய் நல மருத்துவமனை, சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : ஓட்டுநர் கல்வி மற்றும் இதர தகுதி : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தகுதிகள் : பிற்படுத்தப்பட்டவர்கள் (முஸ்லீம் தவிர) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் படை வீரர்கள், அவர்களுடைய முதல் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். தேர்வு முறை : நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் நாட்கள் : ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதியில் வரையில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். குறிப்பு : விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல், வகுப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கனரக ஓட்டுநர் உரிமம், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் குறித்த தகவலுக்கு www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
Tag: Government driving
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |