Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் அனாதையாக கொட்டப்பட்ட மருந்துகள் …!!

அரசு மருத்துவமனைகளின் மருந்துகள் குளத்தின் அருகில் கொட்டிக்கிடந்தன . கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் சாலையோரமாக கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜமீன் ஊத்துக்குளி, கிருஷ்ணா குளத்தின் அருகே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மருந்துகள் சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்தன. காலாவதி  தேதி முடிவடையாத அந்த மருந்துகள் குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருந்துகளை எடுத்துச் சென்ற நிலையில் ,அவற்றை அங்கு கொண்டுவந்து கொட்டியது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவருக்கு காலணியால் தாக்குதல்… போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை ஒரு  நோயாளியின் உறவினர் காலணியால் தாக்கியதால்  சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பயிற்சி மருத்துவரான  மாலதி  சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.இதனை மருத்துவர் மாலதி கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் மருத்துவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தையை திருடிய குடிகாரன்…!!

 குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த  பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று தலையில் விழுந்தது- இலவச சிகிச்சை வழங்க ஆணை..!!

திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்க மருத்துவமனை டீன் அர்ச்சையா ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக  அவரின்  தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து  படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த மேரிக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”ஃபேன் கழன்று தலையில் விழுந்து” அதிர்ச்சியில் நோயாளிகள்…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு துணையாக இருந்தவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக  அவரின்  தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து  படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழப்பு… உறவினர்கள் முற்றுகை !!..

ஆரணி மாம்பாக்கம்   அருகே  அரசு  மருத்துமனையில் பிரசவத்தின்  போது  பெண் உயிரிழந்தது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  அருகே இருங்கூர்   கிராமத்தை  சேர்ந்த அரிவிழிவேந்தன்   மற்றும்  ஜமுனா  தம்பதியினர் . இவர்களுக்கு  திருமணம்  ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆன  நிலையில்  ஜமுனாக்கு  தலை  பிரசவத்திற்கு  மாம்பாக்கம்  அரசு  மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார் .இன்று  காலை  பிரசவவலி  வந்தது . இதையடுத்து  மருத்துவர்கள்  அங்கு  இல்லாததால்  அங்குள்ள  செவிலியர்கள்  மற்றும்  உதவியாளர்கள்  பிரசவம்  பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும்  நோய்களை  பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள   மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க  வேண்டும் என்ற  கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும்  மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் .   ஆனால் இங்கு தினமும் வரும்  மருத்துவக் கழிவுகள் முழுமையாக  நீக்கப்படாமல் அங்குள்ள  பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை  சுற்றியுள்ள பல்வேறு  இடத்திலும்  கொட்டப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ டீன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்  குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார்  எழுந்துள்ளது. இந்த  மருத்துவமனையில் ஏற்பட்ட  மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…!!

வரதட்சணை  கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில்  வசிப்பவர்  ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு  1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி… 3 பேர் கவலைக்கிடம்…!!

திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |