ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை […]
Tag: Government
ஆழ்துளை கிணற்றில் சிக்குள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க இன்னும் சில நிமிடங்களில் பணியை தொடங்குகின்றது ரிக் இயந்திரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]
குழந்தை சுர்ஜித்தை மீட்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ONGC_யின் அதிநவீன ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தது. குழந்தை சுர்ஜித்_தை 31 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குழந்தை சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் சுர்ஜித்தை மீட்க ongc_யின் பிரத்யேக ரிக்கி இயந்திரம் வரவைக்கப்பட்டது. பல்வேறு மணி நேரம் பயணத்தை மேற்கொண்டு ரிக்கி இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தது. இனி இந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு 1 மணி நேரம் ஆகும் என்றும் , 100 அடி பள்ளம் […]
குழந்தை சுர்ஜித்தை மீட்க ONGC_யின் ரிக் இயந்திரம் விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு மனப்பாறையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கின்றது. வழி நெடுகிலும் உள்ள சாலை , மின்சாரம் போன்றவற்றை சரி செய்யப்பட்டது. 31 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 30 […]
ரிக் வாகனத்தின் மூலம் குழந்தையை காப்பதற்கான முயற்சியை அதிகாலை நான்கு மணியில் இருந்து தான் தொடங்க முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 மணி நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் […]
ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று […]
பழுதான ரிக் வாகனம் சரி செய்யப்பட்ட நிலையில் குழந்தையை காப்பாற்ற மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. திருச்சி மணப்பாறை பகுதியை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மீட்பு குழுவினரால் மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டி 80 அடியில் உள்ள […]
ரிக் இயந்திரம் மூலம் 100 அடிக்கு சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ள உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பு குழுவினர் 30 மணி நேரமாக போராடியும் எந்த முயற்சியும் பலன் அளிக்காமல் 26 அடியில் இருந்த குழந்தை பின் 75 அடி சென்று அதன் பின் தற்போது 80 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழு […]
தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாடப் பலரும் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் வேலைநாள் என்பதால் ஊர் திரும்பச் சிரமமாக இருக்கும் என்றும் அதனால் திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் […]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்., 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்’ (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]
மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் ஆண்டுக்கான P.F வட்டி வீதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருங்கால வைப்புநிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து , ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு […]
தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]
சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.
தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் […]
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து […]
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]
பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் , […]