கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]
Tag: governmentschool
பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]
தனியார் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை ஆரம்பித்துவிட்டதைப் போல, கூடிய விரைவில் அரசுப் பள்ளியிலும் தொடங்கிவிடுவார்கள் என சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் அருகே கிருஷ்ணசாமி பள்ளி வளாகத்தில் அய்யப்பாக்கம் பார்க் வர்க்கர்ஸ் அசோசியேஷன், மருதுபாண்டியர் சிலம்ப பாசறை சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய சிலம்ப சம்மேளத்தின் தலைவரும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் ஆணையருமான ராஜேந்திரன் கலந்துகொண்டார். அவருக்கு மாணவர்கள் சாலையில் சிலம்பம் சுற்றியவாறு மலர்த்தூவி உற்சாக […]
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லார்சன் டர்போ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் […]
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.