Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி..! லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியான சோகம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆஸ்பயர் என்ற கட்டிடத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்நிலையில், லிப்ட் பழுதாகி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பியர்-2 என்ற பெயரில் கட்டிடம் கட்டும் போது ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் பழுதடைந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பயர் 2 என்ற கட்டிடத்தில் […]

Categories
பல்சுவை

வேற லெவல்….! பிரம்மாண்ட பறவை இல்லத்தை உருவாக்கிய நபர்….. எங்கு இருக்கு தெரியுமா….?

குஜராத்தை சேர்ந்த 75 வயது உடைய பகவான்ஜி என்பவர் பறவைகளுக்காக ஒரு பிரம்மாண்ட பறவை இல்லத்தில் உருவாக்க நினைத்தார். இதற்காக பகவான்ஜி தனது நிலத்தை பயன்படுத்தினார். இந்நிலையில் 20 லட்ச ரூபாய் செலவில் 60 அடி, அகலம் 40 அடி உயரம், 140 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட பறவை இல்லத்தை பகவான்ஜி உருவாக்கினார். இந்த பறவை இல்லம் தீங்கு விளைவிக்கும் வானிலையில் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிபடுத்தும் வகையில் பறவைகளுக்காக அமைக்கப்பட்டது ஆகும். இந்நிலையில் சுமார் 2500-க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மகன்…. ரூபாய் 15 லட்சத்தை தானமாக கொடுத்த பெற்றோர்…. குவியும் பாராட்டுகள்….!!

கொரோனாவால் மகனை இழந்த பெற்றோர் தங்களது வங்கியில் வைப்பு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலவு செய்வதற்கு முன் வந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ரசிக் மேத்தா மற்றும் கல்பனா மேத்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் கடந்த ஆண்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த இழப்பு அவர்களுக்கு தாங்க முடியாத மன வேதனையை தந்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இந்தியாவில் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு உதவ […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் அத்தைக்கு கொரோனா…. சிவில் மருத்துவமனையில் சிகிச்சை…. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பலர்….!!

பிரதமர் மோடியின் அத்தை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் நாளொன்றுக்கு 350 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவினால் பலியாகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியின் அத்தையான நர்மதாபென் மோடிக்கு 80 வயது ஆகின்றது. இவர் கணவரை இழந்து தனது குடும்பத்துடன் குஜராத் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

தூங்கி எழுந்த கணவர்…. குளியலறையில் காத்திருந்த அதிர்ச்சி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

பெண் மருத்துவர் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காந்திநகர் பகுதியில் நிலேஷ் சவுகான்-மனிஷா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நிலேஷ் காலையில் தூங்கி எழுந்தபோது மனைவி அருகில் இல்லாததால் பதறியுள்ளார். பின்னர் அவர் வீடு முழுவதும் மனைவியை தேடியபோது குளியலறையில் மனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் நிலேஷ் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கம்… வைரலாகும் CCTV காட்சிகள்… குஜராத்தில் பரபரப்பு…!!

ஹோட்டலுக்குள் சிங்கம் வந்து சென்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் மலை அடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அரியவகை ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த சரணாலயம் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்டத்தின் மையப்பகுதியில் சரோடிவர் போர்டிகோ என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் அதிகாலை வேளையில் சிங்கம் ஒன்று ஹோட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்து விட்டு, மீண்டும் வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி… தூங்கும் போதே மரணம்…. தொழிலாளர்களுக்கு நேர்ந்த துயரம்…!!

சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி அவர்களின் மீது ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இறங்கும் போது தள்ளு முள்ளு… திடீரென கவிழ்ந்த படகு… தகராறால் வந்த விளைவு… பறிபோன உயிர்கள்…!!

திடீரென நடந்த தகராறு காரணமாக சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் படகு சவாரி செய்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 15 பேர் காயமடைந்த நிலையில், படகிலிருந்து சுற்றுலா பயணிகள் அவசரமாக படகை விட்டு வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர்ந்து நச்சரித்த கந்துவட்டி கும்பல்”… சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்த ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்..!!

பனஸ்கந்தா மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்து கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராத் கோடா என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் ராஜபாய் புரோஹித்.. இவர் ஒரு தனியார் கந்துவட்டி கும்பலிடமிருந்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.. ஒரு வருடத்தில், வட்டியுடன் அசல் தொகை இரண்டு மடங்காகி விட்டது.. நிலுவைத் தொகையை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.. இதனால் தனது சிறுநீரகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரின் மகனைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் பணியிடமாற்றம்

ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளையும் மீறி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 2,178 ஆக உயர்வு!

குஜராத்தில் இன்று புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,178 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா – மேலும் ஊரடங்கு நீட்டிப்பா ?

குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு  இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எம்எல்ஏ-வை தொடர்ந்து கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது  மிக  வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தினமும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் குஜராத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் கொரோனா நோய்த்தொற்றால் 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் […]

Categories
தேசிய செய்திகள்

”வெளிச்சத்திற்கு வந்த ரேசன் கடை ஊழல்”…. ரேகையைப் பயன்படுத்தி கொள்ளை …!!

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை அச்சுக்களைப் பயன்படுத்தி, குஜராத் ரேசன் கடைகளில் நடைபெற்று வந்த மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சுமார் 1 கோடியே 27 லட்சம் குடும்பஅட்டைதாரர்களின் விரல் ரேகைகள்வெளிநபர்களுக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், அதில், 1100 விரல் ரேகைஅச்சுக்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். குஜராத் மாநில ரேசன் பொருட்கள்,பெருமளவில் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில், பயனாளிகளின் விரல்ரேகை மூலமாக மட்டுமே ரேசன் கடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டையாடவும் தெரியும்… ஒதுங்கி போகவும் தெரியும்… பெண் சிங்கம் செய்த செயல்… வைரலாகும் வீடியோ..!!

கிர் சரணாலயத்தின் வெளிப்புற பகுதியில் பெண் சிங்கம் மற்றும் அதன் குட்டிகள்  பைக்கிற்கு வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் பர்மல் நத்வானி ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பாதையில் செல்லும் தாய் சிங்கத்தை பின் தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் செல்கின்றன. அப்போது திடீரென அவ்வழியில் இருசக்கர வாகனம் ஓன்று வருகிறது. அதில் இருவர் இருந்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள் உற்பத்தி… முதல் 3 நாடுகளில் இந்தியா… பிரதமர் மோடி பெருமிதம்..!!

உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறி உள்ளார்.  10 வருடங்களுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’  நடத்தப்படும். இதில்  உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அதில் உள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியுள்ளது. இந்தமாநாட்டில் பிரதமர் மோடி காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

ஹர்திக் படேலுக்கு ஜன.24 வரை நீதிமன்ற காவல்..!!

காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹர்திக் பட்டேலை ஜனவரி 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவராக வலம்வருபவர் ஹர்திக் படேல். இவர் மீது 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றம் இவரை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர் நேரில் ஆஜராகமல் இருந்ததால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி குஜராத் காவல் துறையினருக்கு நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி…. 170 செமீட்டரா ? கின்னஸில் 17 வயது பெண் மெர்சல் சாதனை …!!

உலகில் நீளமான தலைமுடியை கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதேயான நிலன்ஷி படேல். கின்னஸ் சாதனை உலகில் பலரும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் எனப்படும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவருகின்றனர். அந்தவகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். தற்போதைய காலத்தில் பெண்கள் சுற்றுச்சூழலுக்குப் பயந்து முடிவளர்த்தலைக் குறைத்துவரும் நிலையில், இளம்பெண் ஒருவர் தனது தலைமுடிக்காகவே கின்னஸ் உலக சாதனையைப் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் மரணம்: வாயை திறக்காத பாஜக முதலமைச்சர்.!!

மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்.!!

குஜராத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 111 குழந்தை உயிரிழந்துள்ளன. 111 குழந்தைகளில் 96 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் அல்லது எடை குறைந்து பிறந்ததாகும். தீவிர சிகிச்சைப்பிரிவு மோசமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“கடும் குளிர்” ஒவ்வொரு கூண்டிற்கும் ஹீட்டர்….. உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சிங்கம்.. புலி.. சிறுத்தை…!!

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளை  பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின்  தலைநகரான அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இதில் சிங்கம், புலி,சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு  வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளை  பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குளிரிலிருந்து விலங்குகளை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டிற்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்.!!

பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது. பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது. தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் […]

Categories
தேசிய செய்திகள்

‘கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்”… அக்னி பிழம்பாய் வெடித்த நித்தி..!!

கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார்களைத் திணறவைக்கும் நித்தி…!!

சாமியார் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில போலீசார் திணறி வருகின்றனர். நித்தியானந்தா இருக்கும் இடத்தை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் அம்மாநிலபோலீசாருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால்,அவர் எங்கே இருக்கிறார் என்பது மத்தியஅரசுக்கே தெரியாத நிலைதான் நீடிக்கிறது.இதனால் நீதிமன்றத்தில் அரசும்,காவல்துறையும் இன்றைக்கு என்ன தெரிவிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் முக்கியமான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் ஈகுவாடார் அருகே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மனிதர்களைக் கொன்று நடமாடிய சிறுத்தை சுட்டுக் கொலை …!!

குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே 20 பேரைத் தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.   கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவம்  அருகே யூக்கலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கி இருந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தை உயிருடன் பிடிக்க வேண்டும் என நினைத்த […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்..!!

பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]

Categories
மாநில செய்திகள்

“திருக்குறளை தேசிய நூலாக மாத்துங்க”- குஜராத்தில் இருந்து எழுந்த குரல்..!!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என குஜராத் முன்னாள் டிஜிபி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பங்கேற்றுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை எதுவும் தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது மற்ற அமைப்புகளிடம் இருந்து வரப்பெற்றதா எனவும், அவ்வாறு வந்திருந்தது எனில் அதுகுறித்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ்”… சர்ச்சையை கிளப்பும் குஜராத் பாடப் புத்தகம்..!!

குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதில், 59 பேர் தீயில் கருகி பலியாயினர். அதன் விளைவாக, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , […]

Categories
தேசிய செய்திகள்

600 தமிழர்கள்….. 13 நாட்கள்…. உணவு , தண்ணீர் இன்றி வாடும் அவலம்…. உதவுமா அரசு?

உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கிரிக்கெட் : இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு ..!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பெங்களூருவில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை எதிர்த்து ஆடியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். மைதானத்தில் ஈரப்பதம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

#VijayHazare2019: ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ – தமிழ்நாடு அணி அசத்தல்!

2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. #VijayHazare2019: 2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து குஜராத் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, தமிழ்நாடு சார்பாக அபினவ் முகுந்த் – முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தில் இறங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

புரிந்து கொள்ளுங்கள்…”என்னால் ஹெல்மெட் அணிய முடியாது”… காரணத்தை கேட்டு ஷாக்கான போலீசார்.!!

குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல்   சிக்கிய நபர்  ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.  மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி ஹெல்மெட், பைக் ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் விதிகளை மீறுபவர்கள் அபராதங்களை கட்டி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின்  போடேலி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் மாமோன் என்ற பழ வியாபாரி ஒருவர்  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஏர்போர்ட்டில்…. “நடிகர் சூர்யா போல வேடமிட்ட இளைஞர்”…. நியூயார்க் செல்ல முயன்று சிக்கினார்..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங்  என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம்  நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]

Categories
மாநில செய்திகள்

“புதிய மோட்டார் வாகன சட்டம்” ரூ52,000 அபராதம்… குஜராத்தில் அநியாயம்..!!

ஹரியானா மாநிலம் குர்கானில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தும் விதமாக குருகிராம் போக்குவரத்து காவல்துறையினர் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். நியூ காலனி டீ சீரியஸ் பகுதியில்  போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதாக கூறி டிராக்டரை ஓட்டிச்சென்ற உரிமையாளர் ராம்கோபால் மீது புகார் எழுப்ப பட்டதோடு சிக்கியுள்ளார். இதுகுறித்து குருகிராம் காவல்துறையினர் தெரிவிக்கையில், ஓட்டுனர் உரிமம், […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவல்  செப். 19-ம் தேதி வரை நீட்டிப்பு- லண்டன் நீதிமன்றம் அதிரடி..!!

வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய […]

Categories
தேசிய செய்திகள்

”2,00,000 பேர் காலி” மராட்டியத்தை தீர்த்து கட்டிய மழை….!!

மராட்டியம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மராட்டியத்தில் கோலாப்பூர் , சார்தரா , சங்கிரி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் பேர் காலி செய்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல் படை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூலம் பொது மக்கள் மீட்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை..!!

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது. ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்..!!

குஜராத் மாநிலம் கோத்ராவில்  ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை  6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.   குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி  சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒன்றரை வயது குழந்தையை” வாசுதேவராக தலையில்  சுமந்து  காப்பாற்றிய காவலர் !!..

குஜராத்தில்  உதவி ஆய்வாளர் ஒருவர்  கழுத்தளவு  வெள்ளத்தில்  பச்சிளங்குழந்தையை  தலையில்  சுமந்து  சென்று  காப்பாற்றியது   பலரது  பாராட்டுகளையும்  பெற்றுள்ளது . கடந்த  சில  நாட்களாக குஜராத்  மாநிலம்  வதோதராவில்  பெய்துவரும்  கனமழை காரணமாக  அப்பகுதியில்  வெள்ளம்  சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில்  சிக்கியிருந்த  மக்களை   மீட்கும் பணியில்  மீட்புபடையினர்  ஈடுபட்டு  வருகின்றனர் .  இந்நிலையில்  விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில்    உள்ள  தேவி புரா  பகுதியில்  காவல்துறை  உதவி  ஆய்வாளர்   கோவிந்த்  சாவ்தா   கழுத்தளவு  தண்ணீரில்  இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில்  சுமந்து  சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மழை போய்டுச்சு…. முதலை வந்துடுச்சு…. பீதியில் குஜராத் …!!

குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனை” 20 நாட்கள் தேடி அலைந்த குஜராத் தம்பதியினர்..!!

குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வெற்றி “குஜராத் முதல் டெல்லி வரை” சைக்கிளின் சென்று வாழ்த்திய பாஜக தொண்டர்…!!

தனி பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக தொண்டர் சைக்கிளில் வந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதிய மக்களவை பதவி ஏற்று மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத்_தில் இருந்து டெல்லி_க்கு சைக்கிளில் வந்து வெற்றி பெற்ற பாஜகவினருக்கு […]

Categories

Tech |