Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குட்கா வைத்திருந்த இருவர் கைது.!!

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.

Categories

Tech |