Categories
தேசிய செய்திகள்

பிரிவினை வேண்டாம்…. இந்திய ராணுவத்தில் இணையும் போடோ போராளிகள் …!!

நீண்ட நாட்களாக பிரிவினை கோரிக்கையை முன்வைத்து போராடிவந்த போடோ அமைப்பு தற்போது இந்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் வீரர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைந்த பணியாற்றவுள்ளதாக என்.பி.எஃப்.டி. (NBFD) பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு தனிப்பிரிவுப் படை கோரிக்கையை தவிர்த்துவிட்டு போடோ கொரில்லா படையினர் சுமார் 1,500-2,000 பேர் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறையில் சேரவுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சுமார் 1,500-2,000 போடோ கிளர்ச்சிப்படை வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக ஆயுதம்….. ”வெடிபொருட்களுடன் 644 பயங்கரவாதிகள் சரண்”…. அசாமில் அதிரடி ….!!

அசாமில் எட்டு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் தங்களின் ஆயுதங்களை துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அசாமில் பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் மனம் திருந்தி தங்களின் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இந்த நிகழ்வு கவுகாத்தி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனாவால், உயர் காவல் அலுவலர்கள் மற்றும் மூத்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இவர்கள் முன்னிலையில் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளான போடோலாந்து தேசிய […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னை எஃப்சி அபாரம்: வீழ்ந்தது கவுகாத்தி …!!

ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின்  60வது ஆட்டம்  சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது. நார்த் ஈஸ்ட்   எஃப்சி (கவுகாத்தி)அணியும் சென்னை எஃப்சியும் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு அடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்..! சென்னையில் பரபரப்பு..!!

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி… எரியும் அஸ்ஸாம்… தொடரும் போராட்டம்..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மூவர் உயிரிழந்தனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்க 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் […]

Categories

Tech |