இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/03/ccd31450-5e88-11ea-b27f-f485171c7cc6.jpg)