தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
Tag: #Heavyrain
தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]
பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் […]
பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் விட்டுவிட்டு விதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். […]
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை விடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் சில இடங்களில் மழை பெய்து வந்தது. தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை […]
திருப்பூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சாலையில் ஓடிய வெள்ள நீரில் லாரி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் முழுவதும் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் […]
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மகிழ்ச்சி புறத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், மழை நீர் வழிந்தோட முறையான வசதி அங்கு இல்லாததால் தெருக்களிலே நீர் தேங்கியுள்ளது. இதனால் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் மற்றும் […]
ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய […]
திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து […]
நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நெல்லை மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாகா பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், […]
அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, […]
சென்னையில் தீபாவளியையொட்டி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு வடமேற்கு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, […]
நீலகிரி மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த […]
சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகிழக்குப் பருவமழை அதிகமாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழைவெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று நகரின் பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி to நாமக்கல் NH4 சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி […]
சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என […]
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுஎனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கம்இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, […]
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக தூத்துக்குடி […]
தமிழகம் உட்பட 5 மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பில் , தென்மேற்கு வங்கக்கடல் , தென் தமிழகத்தை […]
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10 சென்டி மீட்டர் மழை […]
அக்டோபர் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல காற்று திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு […]
மும்பையில் இன்று முதல் 29ம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மும்பையின் பாட்னா உள்ளிட்ட […]
நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவமழையை […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டின மாவட்டத்தில் நேற்று மாலை வேளாங்கண்ணி, தண்ணிலம் பாடி, வடக்கு பொய்கை, நல்லூர், சோழபுரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. உப்பளம், நெல்லித்தோப்பு முத்தியால்பேட்டை, காமராஜ் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]
கேரளாவில் மீண்டும் கனமழை தொடங்க உள்ள நிலையில் ஓணம் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்து, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் விளைநிலங்கள் சேதமாகி உயிரிழப்புகளும்.ஏற்பட்டன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாத இறுதியில் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நிவாரணப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட […]
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]
பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும் தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு அனுப்ப […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைபொழுதுகளில் மிதமான மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஏராளமான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட […]
ராசிபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுப்பட்டி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கரிய பெருமாள் கோவில், உப்புக்கள் தட்டு, உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்தது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து […]
துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல் திடீரென வலுப்பெற்று வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள் […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]