வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
Tag: #helmet
தாமரைக்குளம் ஊராட்சியினர் ஒன்று கூடி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், “ஒட்டுமொத்த […]
திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெண் காவலர்கள் ரோஜா பூ வழங்கி புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவானது தமிழகத்தில் நடைபெறும். இவ்விழாவின் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பெண் காவல் அதிகாரிகளும், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்றவர்களும் தங்களது ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இப்பேரணியானது […]
31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 31 வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்கள், சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில் சேலத்தில் தலைக்கவசம் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நகர தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்த படி இருசக்கர […]
சேலத்தில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது மற்றும் முக்கிய சாலை வழியாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பகுதியில் தலைக்கவசம் வியாபாரம் செய்து வரும் முகமது காசிம் என்பவர் வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகையை அறிவித்து உள்ளார். அதன்படி, தலைக்கவசம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. […]
திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது, திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு திரும்ப வர 40 நிமிடங்களும் ஆகும்.தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் சிறிது குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிகள் பயணிக்கும் போது ஹெல்மெட் […]
விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]
உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடம் சரி செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான கடமை. அதற்காகவே அவர்களை நாம் வாக்கு அளித்து தேர்வு செய்கின்றேன். சொல்லப் போனால் அரசாங்கம் மக்களுக்கான வேலைக்காரன் என்றும் சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை வேறு , மக்களுக்கு சேவை செய்யாமல் ஒவ்வொரு அரசும் மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனால் தான் அங்கங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களுக்கு […]
குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல் சிக்கிய நபர் ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி ஹெல்மெட், பைக் ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் விதிகளை மீறுபவர்கள் அபராதங்களை கட்டி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் போடேலி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் மாமோன் என்ற பழ வியாபாரி ஒருவர் […]
ஹெல்மட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிதிமன்றம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.அந்த விதி முழுமையாக அமல்படுத்துங்கள். அமுல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்த நீதிபதிகள் இது குறித்த அறிக்கையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர் . ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயர்ந்தவர்கள் விவரங்களை […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள் இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]
காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]
ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட் அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் […]
ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான் பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது . தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வருவோருக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது என்ற நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியானது திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ஆத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது . இம்முயற்சியை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் சிறப்பான மாற்றங்களை காணலாம் என்றும் ,விபத்துக்கள் குறையும் […]