திமுக தலைமை அறிவித்த்தால் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமென்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தில் பேசிய கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு சர்சையாகியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஆளும் பல்வேறுகர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் , அமித்ஷாவில் விளக்கத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி […]
Tag: #HindiImposition
திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்று தெரிவித்தார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் , […]
அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]
இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]
கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். […]